தீர்க்கதரிசி மிகாயா Chicago, Illinois, USA 61-0426 1நீங்கள் உட்காரலாம். நான் எப்போதாவது அதைப்போன்று ஜீவித்திருப்பேனானால், நான் ஒரு நல்ல மனிதனாய் இருப்பேன் என்று நான் உங்களிடம் கூறுகிறேன். அவர் என்னை மிக அதிகமாய் நேசிக்கிறார் என்றே கூற விரும்புகிறேன். அது அதுவாகத்தான் இருக்கிறது. அவர் என்னைக் குறித்து அதிகமாக நினைக்கிறார். அப்படிப்பட்ட ஒரு மரியாதைக்குரியவனாக நான் ஒரு போதும் வாழ முடிந்ததில்லை. ஆனால் யாரோ ஒருவர் உங்களைக்குறித்து அதிகமாய் அவ்விதம் நினைக்கிறார் என்பதை அறிந்து மிகவும் மகிழ்வுறுகிறேன். 2ஒரு சமயத்தில் என் ஸ்தல சபையில் கர்த்தருக்காக ஏதாவதொன்றைச் செய்யும்படியாக என்னால் முடிந்தவரை கடினமாகப் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். மேலும் நான் வெளியே சென்றேன். யாரோ ஒருவர், “சகோதரன் பிரன்ஹாம், இன்றிரவு கொடுக்கப்பட்ட செய்தியை நான் மெச்சுகிறேன்” என்றார். நான், “உமக்கு நன்றி, அன்புடன் உமக்கு நன்றி” என்றேன். யாரோ ஒரு ஸ்திரி வந்து, “அது ஒரு அற்புதமான செய்தியாக இருந்தது என்று கூறுகிறேன், சகோதரன் பிரன்ஹாம்” என்றாள். நான், “உனக்கு நன்றி, உனக்கு நன்றி” என்றேன். மேலும் யாரோ ஒருவர் ஏதோவொன்றைக் கூறிவிட்டுச் சென்றார். அங்கே ஒரு தேவ ஊழியர் வந்திருந்தார். அவர், “நல்லது” என்றார். மேலும், “ஜனங்கள் என்னைப் புகழ்வதை நான் விரும்புவதில்லை” என்றார். நான், “நல்லது, அங்கே ஒரு வித்தியாசம் உண்டு. நான் அதை விரும்புகிறேன்” என்றேன். மேலும் அவர் சொன்னார்......... மேலும் நான், “நான் செய்வது சரியா, தவறா என்பதை யாராவதொருவர் எனக்குக் கூறுவதை நான் விரும்புகிறேன். நான் எங்கே நிற்கிறேன், என்பதை அறிந்துகொள்ள நான் விரும்புகிறேன்” என்றேன். அவர், “நல்லது, நான் நன்றாகச் செய்தேன் என்று யாதொருவர் என்னிடம் கூறவேண்டும் என்று நான் விரும்புவதில்லை” என்றார். நான், “அதை நான் விரும்புகிறேன்” என்றேன். மேலும் நான், “உமக்கும் எனக்கும் இடையில் ஒரு வித்தியாசம் மட்டும் உண்டு என்று நான் நம்புகிறேன்” என்றேன். அவர், “அது என்ன?” என்றார். நான், “நான் சத்தியத்தைக் கூறுகிறேன். நீர் அப்படியில்லை” என்றேன். 3நாம் எல்லோரும் ..... நாம் எல்லோரும் நாம் எவ்விதமாய் இருக்கிறோமென்று யாராவது கூற விரும்புகிறோம். மேலும், நான் நினைக்கிறேன்; நன்றாகச் சிந்திக்கும் எந்த மனிதனும் தான் உண்மையாகவே தவறாயிருப்பதைக் குறித்து நற்சிந்தையுடன் கூறப்படும் நல்ல குறைகூறுதலை பாராட்டுவான் என்று. சிலர் அப்படியே நீங்கள் தவறாயிருக்கிறீர்கள் என்றும் எங்கே தவறாயிருக்கிறீர்கள் என்றும் கூறுவதை நான் அதைப் பாராட்டுகிறேன். நான் சரியாக இருப்பதை விரும்புகிறேன்; யாராகிலும் என்னை சரிப்படுத்தக் கூடுமானால். ஓ, அங்கே உங்களிடம் கூற அநேக காரியங்கள் உண்டு. நீங்கள் அளித்த வெகுமதிகள் மற்றும் அதைப் போன்றவற்றிற்காக நன்றி, சகோதரனே. ஒவ்வொன்றும் மிகவும் அருமையானது. சகோதரன் ஜோசப், உங்களை அவ்விதமே நேசிக்கிறேன். சகோதரன் ஜோசப் தன் ஜீவிய காலமெல்லாம் ஒவ்வொரு தேசமாக ஒவ்வொரு ஊராகச் சென்று பள்ளிகளை ஒருங்கிணைத்து ஊழியக்காரர்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார் என்பதை நான் அறிகிறேன். சகோதரர் ஜோசப் போஸ் மீது நிச்சயமாக மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. அவர் என் உண்மையான சகோதரன். 4அதன் பிறகு, நீங்கள் இன்றிரவு என் அன்பான மனைவிக்கு மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்து கூறியமைக்காக உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அவள் மிகத்தாமதமாகவே கூட்டத்திற்கு வர முடிந்தது. ஆனால் நீங்கள் அளித்த நல் வரவேற்பைக்குறித்து நான் வீட்டிற்குச் சென்று அவளிடம் கூறுவேன். அவள் அதை எவ்வளவாய்ப் பாராட்டுவாள். அவள் அங்கே....... அது ஒரு காரியம்; சகோ. ஜோசப் என்னைக் குறித்து சிறிது புகழ்ச்சியாகக் கூறினார். ஆனால் அவளைக் குறித்துப் புகழ்ந்து பேசவில்லை - அவள் புகழப்படும் ஒவ்வொன்றுக்கும் தகுதியுள்ளவளாயிருக்கிறாள். அவளுக்கு இன்று நாற்பத்திரண்டு வயதாகிறது. அவள் ஒரு குழந்தையைப் போன்றே இருக்கிறாள். பாருங்கள்... நான் ஒரு குழந்தையை மணந்து கொண்டேன். எனவே...... அவள் - அவள் என்னோடு உண்மையாக என்ன வந்தபோதும் அன்புள்ளவளாக நின்றாள். மேலும் பில்லியின் தாய் (ஹோப்) மரித்த போது நான் இருபத்தி ஐந்து - இருபத்தி ஆறு வயதுள்ள வனாயிருந்தேன். தாய் இல்லாததால் அவன் அழுதான். அவனை கவனித்துக்கொள்ள யாரும் இல்லை. மேலும் அவள் (மேடா) ஒரு பதினேழு, பதினெட்டு வயதுள்ள சிறு பெண்ணாயிருந்தாள். அவள் அவனைக் கவனித்துக் கொண்டாள். 5மேலும் அதன்பின்னர் வந்த வருடங்களில் அந்த சிறுபிள்ளையை மணந்துகொள்ள வேண்டும் என்னும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. நான் முன் பின் தெரியாத நபராக அங்கே வெளியே உட்கார்ந்து கொண்டிருப்பேன். அவளுடைய தகப்பனாரும் நானும் வேட்டைக் கூட்டாளிகள். மேலும் நாங்கள் அவ்வாறே வளர்ந்து வந்தோம். ஏன்... நான்... அவளை... அவள் என்னைக் கோபமூட்டுவாள். நான் மிட்டாய்களுக்காக அவளை அறைந்து விட்டேன். நீங்கள் அறிவீர்கள். அந்த விதமான சிறு பிள்ளை களாகத்தான் நாங்கள் வளர்ந்தோம். எனவே நாங்கள் அவ்விதமாகத்தான் ஒன்றாக வளர்ந்தோம். அவளை மணந்து கொள்ள வேண்டும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால் ..... தேவன் அவளை எனக்கு மனைவியாகக் கொடுத்தபோது, அது நிச்சயமாக தேவன் அருளிய ஒரு ஈவாக இருந்தது என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். உங்களுக்கு மிகவும் நன்றி. மேலும் அவள் என் வாழ்வில் எனக்கு மூன்று அன்பான குழந்தைகளைத் தந்திருக்கிறாள். அவள் பில்லியைப் பொறுப்பேற்றாள். மேலும் ஒரு மனைவியாவதற்கு, ஒரு வளர்ப்புத் தாயாவதற்கு, வழக்கமாக அது எப்படியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். நான் இதைக் கூறமுடியும். (அவள் இங்கே இல்லை. ஆனால் அது உண்மை . ஒவ்வொருவரும் அதை அறிவீர்கள். என் அண்டைவீட்டார் இங்கு இருக்கிறார்கள்) அவள் அப்படியே அந்தப் பையனை நேசித்து அவனுடைய தாயைக் காட்டிலும் சிறந்தவளாக இருந்தாள். அவனுடைய தாய் (ஹோப்) அவன் ஆறுமாதக் குழந்தையாகுமுன்பே ஒரு செல்ல அடி கொடுத்ததை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் மேடா அவனை அடித்ததேயில்லை. அப்படியே-அப்படியே....அவள் சற்று அதிகமானதை உடையவளாய் இருக்க வேண்டியதாயிருந்தது.அது வித்தியாசமானதாயிருந்திருக்கக் கூடும். அந்தக் காரியத்தை அவள் என்னிடம் விட்டுவிட்டாள். சிலர் அவர்கள் பிரம்பைக் கையாடுவதில் நம்பிக்கையில்லை என்று கூறுவதுண்டு. ஆனால் வேதமோ பிரம்பைக் கையாடாதவன் பிள்ளையைத்-தன் மகனைப் பகைக்கிறான் (கெடுக்கிறான்) என்று கூறுகிறதென்று உங்களுக்குத் தெரியுமா? எனவே நான்... நான் பிள்ளைகளைத் திருத்துவதில் நம்பிக்கையுள்ளவனாயிருக்கிறேன். அவர்களை உருவாக்குவதில் நாம் அதிகமாய் அப்படிச் செய்பவர்களாயிருந்தால் அதிகமான இளம் குற்றவாளிகளை உடையவர்களாக இருக்கமாட்டோம். 6இப்பொழுது, இன்றிரவு இது புதன் கிழமை இரவாக இருக்கிறபடியால் சபைகளில் கூட்டங்கள் வைக்கப்பட்டிருக்கின்ற படியால் இங்கு அதிகமான ஜனங்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. சபைகளில் இன்றிரவு ஜெபக்கூட்டங்கள் இருக்கின்றன. ஆயினும் இன்று இங்கு வந்துள்ளோருக்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். மேலும் எல்லோருமே ஒரே இரவில் வராமலிருப்பதும் நன்மைக்கே. ஏனெனில் செய்யப்பட விரும்பும் காரியங்களை எல்லோருக்கும் ஒரே இரவில் செய்யமுடியாது. சில காலத்திற்கு முன்பு இந்தக் கூட்டத்தில் இதற்கு முன்பு வந்திராதவர்கள் எத்தனைபேர் என்று கேட்டதற்கு கூட்டத்தில் பாதிபேருக்கு மேல் என்று கூறினர். நேற்று இரவு கேட்டபோது இதற்கு முன்பு கூட்டத்திற்கு வந்திராதவர்கள் மூன்றில் இரண்டு பங்காக இருந்தது. அது அவ்வாறு தொடர்ந்து அதிகமாகிக் கொண்டுள்ளது. இப்பொழுது, கூறக்கூடிய காரியங்கள் அனேகம் அங்கு உண்டு. நான் தவறாகக் கூறவில்லையெனில் நான் நம்புகிறேன்... நான் நேற்றிரவு அளித்த செய்தியின்.... கருப்பாகத்தை மறந்துவிட்டேன். நான் ஏதோ ஒன்றை அளித்தேன்.. ஓ, “மறக்கப்பட்ட பரலோகப் பேரின்பம்”. அது மத்தேயு 11ம் அதிகாரம் 6ம் வசனம் அல்லது மத். 11 : 6 ஐப் போன்ற ஏதோவொன்று. மறக்கப்பட்ட பரலோகப் பேரின்பம், மேலும் “என்னில் இடறலடையாதிருக்கிறவன் பாக்கியவான்.'' 7நான் எவ்வாறு ஜனங்கள் இயேசுவைக் குறித்து இடறலடைந்தார்கள் என்று பிரசங்கித்தேன். மேலும் யோவான் இடறலடைந்தான். அவன் அவ்விதமாய் அதைக்கூறவில்லை. ஆனால் அது எவ்விதமாக இருக்க வேண்டும் என்று அவன் நினைத்திருந்தானோ அவ்விதமாக அது இல்லாமலிருந்தபோது அவன் சற்றே இடறலடைந்தான். ஏனெனில் அவன் இயேசுவை அல்லது கிறிஸ்துவை, மேசியாவை தூற்றுக்கூடையுடன் வந்து களத்தை நன்றாய் விளக்கி பதரையோ அக்கினியால் சுட்டெரிப்பார் என்று அறிமுகம் செய்திருந்தான். அவர் வந்தபோதோ அவர் மிகவும் சாந்தமுள்ளவராகவும், தாழ்மையுள்ளவராகவும் மென்மையானவராகவும் வந்தார். எனவே அது என்னவென்று அவனால் புரிந்துகொள்ளக் கூடாததாயிருந்தது. அவன் கைவிடப்பட்டவனைப் போல் அவன் அப்படியே சற்று இடறலடைந்தான். ஆனாலும் அவன் மேசியாவின் அடையாளங்களைக் கண்டு அவர் தான் அவர் என்று கண்டு கொண்டிருந்தான். எனவே அவன் அவர் தான் மேசியா என்று அறிய விரும்பி சீஷர்களை அவரிடம் அனுப்பினான். யோவான் எலியாவின் ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டவனாயிருந்த போதிலும் அவன் இப்படிப்பட்ட காரியத்தைக் கூறுவதென்பது ஒரு பயங்கரமான காரியமாயிருந்தது. ஆனால் எலியாவும் கூட மிகவும் சோர்வுற்று சூரைச்செடியின் கீழ் படுத்துக் கொண்டான் என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும் இங்கு யோவான்... அங்கே நீங்கள்... அங்கே நின்று செய்தியை கொடுத்துக் கொண்டிருக்கும் வரை எல்லாம் சரிதான்... ஆனால் நீங்கள் உள்ளே கொண்டு செல்லப்படும் போது அது சற்று வித்தியாசமான ஒன்றாகும். பாருங்கள்? எனவே யோவான் காவலிலிருந்தான். அவனுடைய கழுகுக்கண்கள் திரையிடப் பட்டிருந்தது. 8மேலும் இயேசு, யோவான் அதை எவ்விதம் அறிந்துகொள்ள வேண்டும் என்று பிரசங்கிக்கவோ, சொல்லவோயில்லை. “கூட்டம் முடியும் வரை இருந்து என்ன சம்பவிக்கிறது என்று பாருங்கள்” என்று மட்டும் கூறினார். கூட்டம் முடிந்த பிறகு அவர், “இப்பொழுது யோவானிடம் சென்று முடவர் நடக்கிறார்கள், குருடர் காண்கிறார்கள், செவிடர் கேட்கிறார்கள் மற்றும் இது போன்றவற்றை மேலும் தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் பாக்கியவான் என்று கூறுங்கள்” என்றார். பிறகு நான் ஒரு இடறலைக் குறித்துப் பேசத் துவங்கினேன். மேலும், நான்.... சீயோன், இல்லினாய்ஸிலிருந்து இங்கு வந்திருக்கும் ஒரு சிறு குழந்தையைக் குறித்து நான் கூறினேன். நான் தவறாகக் கூறவில்லையெனில், அந்தக் குழந்தை இக்கட்டிடத்தில் இன்றிரவு இருந்ததாக அவர்கள் நினைப்பதாக என்னிடம் கூறினர். அது சரியா? ஊனமுற்ற கால்களையுடைய, வளைந்த கால்களையுடையதாயிருந்து இப்பொழுது நடக்கிற தாயிருக்கிற சீயோன், இல்லினாய்ஸிலிருந்து வந்திருக்கும் அந்த சிறுபிள்ளையின் தாய் இங்கிருக்கிறாளா? அவள் இன்றிரவோ அல்லது நாளையோ இங்கிருக்கக் கூடும். அதோ அந்த தாய்.... சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக... நேற்றிரவு நீ இங்கிருந்தாயா? சரி. அது சரி... நான் அறியவில்லை . நான் என்ன கருதுகிறேன் என்று புரிந்து கொண்டாயா? நீ இடறலைக்கொண்டு வரவில்லை. ஆனால் அப்படியே... அந்தக்குழந்தைக்கு என்ன சம்பவிக்கப்போகிறது என்று வியந்து கொண்டிருந்தாய். அது சரியா? அது சரி. கர்த்தர் என்ன சொன்னாரோ சரியாக அதையே செய்தார். எப்படியாயினும் அவர் அதைச் செய்தார். அவர் அதைச் செய்யவில்லையா? அது அற்புதமானது. அதற்காகக் கர்த்தருக்கு நன்றி கூறு. அந்தக் குழந்தையை உன்னிடம் வைத்திருக்கிறாயா? அது இங்கே இல்லை. 9நல்லது. அது ஒரு.... அந்தத்தாய் வெளியே சென்று விட்டாள். அவள் விசுவாசத்தால் முற்றிலும் நிரப்பப்பட்டிருந்தாள். ஓ என்னே, என் கரங்களை குழந்தையின் மீது வைத்தவுடனே அது அங்கேயே சம்பவிப்பதாக இருந்தது. ஆனால் நீங்கள் பாருங்கள். அது உண்மையாகவே சில நேரங்களில்... நாம் அது உண்மையான விசுவாசமாக இருக்குமானால், ஒன்றுமே அதனைத் தடுத்து நிறுத்த முடியாது. எனவே, வெளியே தொடர்வண்டியில் அந்த சிறிய தாய் குழந்தையை அடுத்த நாள் கொண்டுவந்தாள். அவளும் அவள் கணவனும் ஆச்சரியப்பட்டுக் கொண்டேவந்து அந்தக் குழந்தையின் கால்பகுதி ஏன் கீழே வரவில்லை என்று அறிய விரும்பினர். நல்லது, நான் ஒன்றையுமே கூறவில்லை. மேலும் நான் நினைத்தேன், “அவள் அதை விசுவாசிக்கிறாள். சிறுபிள்ளையும் உண்மையாகவே விசுவாசிக்கிறாள். எனவே அது நிகழ்ந்தாக வேண்டும். விசுவாசம் இருக்கும் வரை.......” அவள் வெளியே செல்லும்போது, என்னிடம் ஒன்றைக்கேட்டாள், “சகோதரன் பிரன்ஹாம், என் குழந்தை ஊனமாயிருக்க வேண்டும் என்பது தேவனுடைய சித்தம் என்று நினைக்கிறீரா?” என்று கேட்டாள். நான், “இல்லை ஐயா, அப்படியில்லை” என்றேன். நான் அவ்வாறு கூறவேண்டும் என்றே அவள் எதிர்பார்த்திருந்தாள். பாருங்கள்? எனவே அவர் (தேவன்) அந்த விசுவாசத்தைக் கனப்படுத்தி குழந்தையை சுகமாக்கினார். 10சில வினாடிகளுக்கு முன்பு இது வந்தது. நான் இந்த சாட்சியைத் தவறாகக் கூறக்கூடும். ஆனால் அங்கே..... அந்த ஸ்திரீ இங்கிருந்தால்... நான் அந்தக் காரையும் தொடர்வண்டியையும் பார்த்தேன் என்று நினைத்தேன். அங்கே ஒரு ஸ்திரீ சமீபத்தில் எனது சபைக்கு வந்தாள், ஓ, அது ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் கூட ஆகியிருக்காது என்று நினைக்கிறேன். அந்த ஸ்திரீ ஒரு கட்டியினால் இந்த விதமாகவே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள். ஓ, அப்படிப்பட்ட கட்டியை நீங்கள் ஒரு போதும் பார்த்திருக்க முடியாது. மருத்துவர்கள் அதைத் தொடக்கூட முடியவில்லை. அது அப்படிப்பட்ட பயங்கரமான நிலையிலிருந்தது. அவளால் நடக்கக்கூட முடியாதபடி மோசமாயிருந்தது. அவர்கள் அவளை பொதிந்து வைக்க வேண்டியதாயிருந்தது. நல்லது, நான் அந்த இரவு சபையில் இருக்கப்போகிறேன் என்று அவள் கேள்விப்பட்டாள். அந்த சிறிய கூடாரத்தில் அது எப்படியிருக்கும் என்று நீங்கள் அறிவீர்கள். ஆராதனைக்குப் பிறகு நான் அன்று வியாதியஸ்தருக்காக ஜெபிக்கவில்லை. அவளுக்காக வெறுமனே ஜெபத்தை மட்டும் ஏறெடுத்தேன். அவள்... அவள்...நான் யூகிக்கிறேன். அவள் சற்று இடறலடைந்தாள் என்று. இருப்பினும் நான் மூப்பர்களின் அறை வழியாகப் பின்பக்கத்திலுள்ள என் படிப்பறையினுள் சென்றதை விசுவாசமுள்ள மூப்பர்களில் சிலர் அறிந்திருந்தனர். இந்த ஏழையான பெரிய உருவமுடைய பயங்கரமான பெரிய கட்டியையுடைய அந்த ஸ்திரீயை அவர்கள் பொதிந்து வைத்தனர். அவர்கள் அவளை அந்தப் படிகளில் படுக்க வைத்தனர். நான் வெளியே வரும்போது அவளைத் தொடும்படியாக அல்லது அவள் சுகமடைய ஏதாகிலும் காரியங்கள் செய்யப்படும் படியாக. 11எனவே பிறகு நான் வெளியே வந்த போது அவள் வார்த்தையைப் பேசினாள். தேவன் எனக்கு வார்த்தையைக் கொடுத்தார். நான் அதைப்பேசினேன். மேலும் அது கடந்த கோடைக்காலமாயிருக்கும் என்று நம்புகிறேன். அவள் தன் கணவனுடன் கலிபோர்னியாவுக்கு வந்தாள். அந்த ஸ்திரீ ஒரு மென்மையானவளாய்.... அந்தக் கட்டி முற்றிலுமாய் மறைந்து போயிருந்தது. அங்கே ஒன்றுமில்லை. அது அப்படித்தானென்றால்.... நான்... நான் அவளை மற்றொருநாள் ப்ளுமிங்டனில் கண்டு, “சகோதரியே, நீங்கள் இன்றிரவு சாட்சி சொல்லும்படி நிற்க வேண்டும்” என்றேன். சில தேவ ஊழியர்கள் என்னைத்தாங்கிப் பிடித்திருந்தனர். நான் பேசிக்கொண்டிருக்க வேண்டியதாயிருந்தது. அப்பொழுது அதை நான் மறந்துவிட்டேன். கலிபோர்னியா உரிமத்துடன் அங்கு நின்றிருந்த காரும் தொடர்வண்டியும் அவளுடையதாயிருக்கும் என்று நினைத்தேன். அந்த ஸ்திரீ இங்கிருந்தால், சகோதரியே, உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? ஆம், அவள் அங்கே பின்பக்கமாக இருக்கிறாள். அது சரி. அங்கே ஜனங்கள் உன்னைக் காணக்கூடும்படி சற்று முன்பாக வருவாயா? உன் மேற்சட்டையை (Coat) சற்று நீக்குவாயா? ஜனங்கள் உன்னைக்காணும்படி? உன்னைக் கொன்றுபோடக் கூடியதாய் இருந்த மிகப்பெரிய கட்டியை? (சகோதரி களிகூருகிறாள் - ஆசிரியர்) அப்படிப்பட்ட உருவமுடையவளாயிருந்தால், உன்னால் இப்பொழுது இப்படி உணரமுடிந்தது. இப்பொழுது, நடக்கவும் கூடமுடியாதவளாய் மிகப்பெரிய உருவமுடையவளாய் இருந்தாள் என்பதை நினைத்துப் பாருங்கள்.... அவளை அந்தக் கட்டியுடன் இவ்விதமாய் பொதிந்து வைக்க வேண்டியிருந்தது. மேலும் கட்டியின் ஒவ்வொரு சிறுபாகமும் மறைந்துபோனது. போயே போய்விட்டது. பாருங்கள்? இப்பொழுது நாம் அந்தக்கட்டியைப் பார்க்க முடியாது. 12இன்றிரவு இக்கட்டிடத்தில் ஒரு பதிவு செய்யப்பட்ட ஒரு செவிலியர் அங்கே இருக்கிறாள் என்று நம்புகிறேன். இங்கு அன்றொரு நாள் நான் அவளையும் அவளுடைய கணவரையும் கண்டேன். அவர்கள் என் ஆத்ம நண்பர்கள். அவர்களைப் பார்த்தபோது அது அதிக நேரம் எடுத்துக் கொண்டது. ஹூஸ்டன், டெக்சாஸிலுள்ள பதிவு குறிப்பேடுகளினின்று அவள் புற்றுநோயால் தின்னப்பட்டு நம்பிக்கை இழந்தவளாய் மரித்துக் கொண்டிருந்தாள். மேலும் அவர்கள் அவளை கூட்டத்திற்குக் கொண்டுவந்தனர். என்னுடைய சகோதரன் ஹாவர்ட் கூட்டத்தில் ஜெப அட்டைகளை அவ்விரவு வினியோகித்தபோது... பில்லி பால் செய்வதுபோலவே அவரும் ஜெபஅட்டைகளை கலந்து முன்சென்று வினியோகிப்பார். மேலும் அந்த ஸ்திரீ அங்கே உட்கார்ந்துகொண்டு தன்னைக் காட்டிலும் மோசமாயிருந்த ஸ்திரீயைப் பார்த்தபோது இவள் மருத்துவ செவிலியரானபடியினால் வியாதியஸ்தர்களுக்குள்ள உணர்வு உண்டானபடியால் மிகவும் பின்பக்கமாய் சென்று அங்கே ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டாள். அந்த இரவில் சகோதரன் ஹாவர்ட் ஜெப அட்டைகளை கூட்டத்தின் முன்பக்கத்தில் வினியோகிக்க வந்தபோது பரிசுத்த ஆவியானவர், “இந்த இரவு பின்பக்கம் சென்று ஜெப அட்டைகளைக் கொடு” என்றார். மேலும் அவள் ஜெப அட்டையைப் பெற்றுக்கொண்டு ஜெப வரிசையில் வந்தாள். பரிசுத்த ஆவியானவர் அவளிடம் புற்று நோயைக் குறித்துப் பேசி அவளை முற்றிலுமாக, பூரணமாக சுகமாக்கினார். இது சுமார் பத்து அல்லது பன்னிரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கும் முன்பாக இருக்கலாம். இன்றும் அந்த பதிவுபெற்ற செவிலியர் அங்கே டெக்சாஸில் ஒரு மருத்துவ காப்பகத்தை நடத்தி வருகிறாள். சகோதரன்.... 13சகோதரி ஹாரிஸ் இன்றிரவு நீ இங்கிருக்கிறாயா? அவள் ஏதோ ஓரிடத்தில் உள்ள ஒரு பதிவுபெற்ற செவிலியரான அழகான அருமையான ஸ்திரீ. அவள் இங்கிருக்கிறாள். அது சரி.... ஒரு பதிவு பெற்ற செவிலியர். கடந்த காலத்தில் புற்றுநோயாளி.... அவளுக்கு மருத்துவம் செய்த மருத்துவர்கள் அது அவளைப் படுக்கையில் வைத்து விட்டது என்று அறிவர். அவளுக்கு உதவியாயிருந்த அந்த ஓய்வு பெற்ற மருத்துவர்கள் அவளைப்பற்றி என்னிடம் கூறினர். அவள் தேவனுக்குப் பயந்த ஒரு கிறிஸ்தவப் பெண்மணி என்று கூறினர். அவள் தன் வாழ்க்கையை கிறிஸ்துவுக்குக் கொடுத்தாள். தேவன் அவளை சுகமாக்கினார். ஓ, நண்பர்களே, நான் என்ன கூற முயற்சிக்கிறேன்? இடறலடைய வேண்டாம். அவரில்... அவரில் இடறல் எதுவும் இல்லை . அவர் குறித்த வேளையில் தீவிரமாக வருகிறார். உம். உம். அது சரி. 14பிறகு நேற்று இரவில் பரிசுத்த ஆவியானவர் நான் பின் தங்கியிருக்கவும் இல்லை, முந்திக்கொண்டும் செல்லவில்லை என்று கூறும்படி நடத்தினார். நாம் குறிக்கப்பட்ட வேளையில் இருக்கிறோம். இந்நாளின் இந்நேரத்திற்கான செய்தியை நாம் உடையவர்களாயிருக்கிறோம். மேலும் யாராவது, “ஓ, அந்த நாட்கள் கடந்து விட்டது” என்று கூறினால், நீங்கள் யோவானிடம் (உங்கள் போதகரிடம் அல்லது யாரிடமாயிருந்தாலும், பாருங்கள்?) முடவர் நடக்கிறார்கள், குருடர் காண்கிறார்கள், கட்டிகள் மறைகின்றன மற்றும் புற்றுநோய்கள் சுகமாகின்றன என்று கூறுங்கள். அது எதுவரை தொடரும்? நீங்கள் விசுவாசிக்கும் வரை அது நடக்கும். அது சரி. அது... அது இரட்சிப்பு எவ்வளவு காலம் நீடித்திருக்கிறதோ அது போலவே, நீங்கள் விசுவாசிக்கும் வரை அது தொடரும். எனவே திடமனதாயிருங்கள். தேவனில் விசுவாசமாயிருங்கள். கிறிஸ்து நம்மை விட்டு விலகிவிடவில்லை. இடறலடைய வேண்டாம். அவர் வாக்களித்திருப்பாரானால் சரியான நேரத்தில், குறித்த நேரத்தில் அதைச் செய்வார். அவர் ஒவ்வொரு காலத்திலும் குறித்தவேளையில் அதைச்செய்வார். நீங்கள், “சகோ. பிரன்ஹாம் இந்த இரவு எனக்கு உரியது; நான் சுகமடையப்போகிறேன்” என்று கூறுங்கள். கவலைப்படாதீர்கள். அவர் குறித்த வேளையில் அதைச் செய்யும்படி நீங்கள் குறித்தவேளை வரை தரித்திருங்கள். மேலும் இந்த இரவு உங்களுக்குரியது என்று விசுவாசியுங்கள். அது தான் இது. நாம் ஜெபத்துக்காக அப்படியே சிறிது நேரம் நம் தலைகளை வணங்குவோம். 15கிருபையுள்ள பரிசுத்த பரலோகப் பிதாவே, உம்முடைய இரக்கத்தின் சிங்காசனத்தை நாங்கள் நெருங்குகையில் உம்முடைய வார்த்தையைப் பிரசங்கிக்க இன்றிரவு உம்முடைய கிருபையை எங்களுக்குத் தந்து, வார்த்தையைக் காணவும் விசுவாசிக்கவும் செய்வார்களாக. இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். நான் ஜெபித்துக் கொண்டிருந்த பொழுது.... பிற்பகலில் என் மனைவியையும் என் சிறிய மகன் ஜோசப்பையும் அழைத்து வந்தீர்கள். அவர்கள் இக்கட்டிடத்தில் எங்கோ இருக்கிறார்கள். அவர்கள் உள்ளே வந்திருப்பார்கள் என்று நான் யூகிக்கிறேன். அவரும் அவர் மனைவியும் யேகோவா சாட்சிக்காரர்கள் என்றும் ஆண்டர்சன் தேவ சபையைச் சார்ந்தவர்கள் என்றும் நினைக்கிறேன். அவள் ஒரு காசநோயாளியாயிருந்தாள். அவள் சுகமாக்கப்பட்டாள். அவளுக்கு ஊனமுற்ற ஒரு மகன் இருக்கிறான். அவன் கால்களில் போலியோ கண்டு அவன் கால்கள் இழுக்கப்பட்டன. அவர்கள் தொடர்ந்து கூட்டங்களுக்கு வந்தனர். அவர்கள் ஹுஸ்டன், டெக்சாஸில் இருந்தனர். நான், அது நம்முடைய சகோதரி ஹாரிஸ் சுகமடைந்த இடம் என்று நம்புகிறேன். (அவள் இங்கிருக்கிறாள் - மூலையில் இருட்டாக இருக்கிறது. அவள் அங்கே எங்கிருந்தாலும்) மேலும் அந்த ஒளி அவர்கள் மீது இறங்கிவந்தது. 16அவர்கள் லூயிவில்லில் இருந்தார்கள். அவர்கள் வாழும் கென்டக்கியின் வெளிப்புறமிருந்து வந்திருந்தனர். மேலும் அவர்களைப் போலவே மற்ற சபைகளுக்குப்போகாத கண்டிப்பான குடும்பத்திலிருந்து வந்த யேகோவா சாட்சிக்காரரான சகோதரன் வுட்டும் கூட அங்கே வந்திருந்தார் என்று யூகிக்கிறேன். ஆனால் அன்றிரவில் அவர் ஒரு பெண்ணைக்கண்டார். அவள் அன்றிரவில் உணர்ச்சியற்ற நிலையில் இருந்தாள். அநேக வருடங்களாக அவள் படுக்கையிலிருந்து அசையக்கூடாதவளாய் இருந்தாள். (அவளுடைய இடுப்பு சதை பெருத்ததாயிருந்தது) அவள் படுக்கையிலிருந்து எழுந்து மேடையின் மேல் சுற்றிலும் நடந்து அவளுடைய தூக்குப் படுக்கையை எடுத்துக்கொண்டு தன் வீட்டிற்குப் போனாள். அடுத்த நாள் படிக்கட்டுகளில் மேலும் கீழும் குதித்து ஓடினாள். மேலும் அவள் வேலை செய்கிறாள். சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஒரு சிறு பையன், ஒரு கால் மற்றதைப்பார்க்கிலும் நீளமானதாக உடையவன் - அதிலிருந்து எழுந்து மேடையின் மேல் நடந்து வந்து அங்கே நின்றான். அந்த சிறுபையன் மேடையின் மேலேயே தன் கால்கள் இரண்டும் ஒரே அளவாக ஆகிவிட்டது என்று சாட்சி கூறினான். அது அவர்களில் விசுவாசத்தை தொடங்கச் செய்தது. 17நான் ஸ்வீடனுக்குச் சென்று திரும்பி வந்தேன். அவர்கள் ஓஹியோவில் நடந்த ஏதோ ஒரு கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். அவர்கள் கூடாரத்தில் பின்பக்கமாய்ப் போய் உட்கார்ந்தார்கள். அந்த இரவு பரிசுத்த ஆவியானவர், “ஒரு சிறிய பையன் தன் தகப்பனாரோடும் தாயாரோடும் ஒரு சூடாக்கும் உடையுடன், மஞ்சள் நிறமுள்ள சூடாக்கும் மேலுடையுடன் பின்பக்கம் உட்கார்ந்திருக் கிறான்” என்றார். மேலும் அவர்களைக் குறித்த அனைத்தையும் கூறினார். அவர்கள் ஒருபோதும்... நான் அவர்களைக் குறித்து ஒரு போதும் கேள்விப்பட்டதில்லை என்று அவர்கள் அறிந்திருந்தனர். அவர் கெண்டக்கியில் ஒரு ஒப்பந்ததாரராக இருந்தார். நான், “கர்த்தர் உரைக்கிறதாவது. இந்த ஊனமுற்ற பையன் சுகமடைந்து விட்டான்” என்றேன். நல்லது. அவன் அங்கே சற்று நேரம் உட்கார்ந்திருந்தான். பிறகு அவள் நேரடியாக தன் கணவனிடம், “பையனை நிற்கச் செய்யுங்கள்” என்று, அது போன்று ஏதோ கூறினாள். அந்தப் பையன் எழுந்து நின்றான். அவன் கால்கள் இரண்டும் சம அளவில் இருந்தது. இன்றிரவு அந்தப்பையன் ஒரு வாலிபனாய், திருமணமாகி குழந்தைகளுடையவனாயிருக்கிறான். நான் தவறாக இல்லையெனில் டேவிட் நீ கட்டிடத்தில் இருக்கிறாயா? டேவிட் வுட், நீ எங்கிருக்கிறாய்? ஒரு கால் அவன் கீழாக இழுக்கப்பட்டு மற்றதால்... நீ இங்கிருக்கிறாயா, டேவிட்? அதோ அங்கே அவன் கதவுகளுக் கருகில் நின்று கொண்டிருக்கிறான். ஜனங்கள் காணும்படி சற்று முன்பாக வருவாயா டேவிட்? அதனால் அவர்கள் உன் கால்கள் முன்புபோல் இல்லையென்று அறிந்துகொள்ளும்படி... அவனுக்குக் கீழே வளைந்திழுக்கப்பட்டிருந்த கால் எது என்று அறிந்து கொள்ள முடியாத விதத்தில் சுகமாக்கப்பட்டவன். 18இப்பொழுது சீயோனிலிருந்து சிறு குழந்தையுடன் வந்திருக்கும் சகோதரியே, நீ, வளைந்திழுக்கப்பட்டுப் போன கால்களை உடைய ஒருவனுக்கு தேவன் என்ன செய்துள்ளார் என்று பார்த்தாய். அவர் உன்னுடைய குழந்தைக்காக என்ன செய்வார் என்று பார். அவர் இன்னும் தேவனாகவே இருக்கிறார். அவர் குறித்த நேரத்தில் செயல்படுவார். நாம் செய்யவேண்டிய ஒன்று அவர் பிரசன்னம் நம் மத்தியிலிருக்கும்படி குறித்த நேரத்தில் நமது விசுவாசத்தைக் கொண்டிருப்பதே ஆகும். அப்பொழுது அது சம்பவிக்கும். . இப்பொழுது, ஒரு சிறிய செய்திக்காக, பில்லியின் யோசனைப்படி நேற்றிரவு உண்மையாகவே முப்பத்தைந்து, நாற்பது நிமிடங்கள் மட்டும் எடுத்துக் கொண்டேன். முன்பெல்லாம் செய்திக்காக இரண்டு மணி அல்லது அதற்கும் மேலாக எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவன், “நீங்கள் பிரசங்க நேரத்தை இருபது நிமிடங்களாக குறைத்தால் அது ஜனங்களுக்கு நன்மையாக இருக்கும்” என்றான். நான், “நல்லது அப்படிச் செய்வது எனக்குக் கடினமான ஒன்றாக இருக்கும்” என்றேன். எனவே, பாருங்கள், அது ஒரு வகையில் கடினமானது. நான் (அதிகம்) பேச வேண்டியவனா யிருக்கிறேன். ஏனெனில் நான் பேசுவது மிகப்பெரிய கர்த்தரின் வருகையைக் குறித்ததாகும். அவ்வாறு தொடர்ந்து பேசுவதை நான் விரும்புகிறேன். 19நீங்கள் வேத வாக்கியங்களைக் காண விரும்பினால், ஒரு சிறிய பாடத்திற்காக கர்த்தர் உதவி செய்வாரானால், ஒரு சிறு பகுதியிலிருந்து அது 1 ராஜாக்கள் 22-ம் அதிகாரம் பதினான்காம் வசனம். அந்த ஒரு வசனத்திலிருந்து ஒரு சில நிமிடங்கள் பேசுவதற்காக. அதற்கு மிகாயா. கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்றான். இப்பொழுது நமக்கு முன்பாக ஒரு மகத்தான சம்பவத்தை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால் அதை சரியானவிதமாக அணுக நேரம் போதாது. நாளை இரவு அல்லது மற்றொரு நாள் இரவில் கர்த்தருக்குச் சித்தமானால் என்னால் கூடுமானால், நான் பழைய ஏற்பாட்டிலிருந்து தீர்க்கதரிசிகளைக் குறித்த விபரங்களை பிரசங்கிப்பேன். அவருக்கு சித்தமானால் வருகிற வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை இரவு “மிருகத்தின் முத்திரை” மற்றும் “தேவனின் முத்திரை” என்பவற்றின் பேரில் பேசும்படி தேவன் என்னுடன் இடைபடுவதுபோல் தெரிகிறது. அது சபையானது சரியாக இக்காலத்தில் அறிந்துகொள்ளவேண்டிய காரியம் என்று நான் நினைக்கிறேன். 20இந்தப் பகுதியில் அங்கே இஸ்ரவேலில் ஆகாப் என்னும் பெயருடைய ஒரு ராஜா அக்காலத்தில் இருந்தான் என்றும் அதே காலத்தில் யோசபாத் யூதாவின் ராஜாவாக இருந்தான் என்றும் காண்கிறோம். யோசபாத் நீதிமானும் தேவ பயமுள்ளவனுமா யிருந்தான். அவனுக்கு முன்பு அவன் தகப்பனாகிய ஆசா ஒரு தேவபயமுள்ள மனிதனாயிருந்தான். ஆகாப் ஒரு எல்லைக்கோட்டு விசுவாசி என்று நாம் அழைப்பது போல் இருந்ததைக் காண்கிறோம். காற்று தன் திசையில் ஆகாபை அடித்துச் சென்றது. அவனுக்கு யேசபேல் என்னும் மனைவி இருந்தாள். அவன் தன் ராஜ்யத்தை பலப்படுத்தவே அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டான். அவள் ஒரு விக்கிரகாராதனைக்காரி. அவள் இஸ்ரவேலை நிலைகுலையச் செய்தாள். பிரசங்கிமார்கள் எல்லாம் பின்மாறிப் போயினார். நல்ல பிரசங்கிமார் எல்லாரும் வெது வெதுப்பாகி விட்டனர். அவர்கள் அனைவருமே பின்மாறிப் போயினர். ஆனால் அங்கு ஒரு வயதான மனிதன் அவ்விதம் பின்மாறிப்போகவில்லை. அது தான் எலியா. அவன் தன்னைத்தானே முட்டாளாக்கிக் கொள்ளவில்லை. எனவே சரியாக அவன் வார்த்தையுடன் நின்றான். எனவே அவன் ஆகாபுக்கு என்ன நேரிடப்போகிறது என்று தீர்க்கதரிசனம் உரைத்தான். 21அவர்கள் சகோதரர்களைப் போன்றிருந்தபடியால், ஒரு நாள் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைக் காணும்படி அங்கு சென்றிருந்தான். மெத்தடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன் மற்றும் பெந்தெகோஸ்தேயினரைப்போல் அவர்கள் சகோதரர்களாயிருந்தனர். அவர்கள் ஒரே தேவனை தொழுதுகொண்டு வந்த ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தனர். ஆகாப்.... அவன் இன்னும் ஒரு விசுவாசியாய், வெது வெதுப்பான எல்லைக்கோட்டு விசுவாசியாயிருந்தான். ஆனால் அவன் மனைவியோ அவன் வீட்டின் தலையாயிருந்தாள்... ஆனால் அவளோ இந்தத் தலையைத் திரும்பச்செய்யும் கழுத்தாக இருந்தாள்... நீங்கள் பாருங்கள், அவள் என்னவெல்லாம் சொன்னாளோ அது நடந்தது. அவளே இயக்குகிறவளாய் இருந்தாள். நல்ல சதுரவடிவான பின்புறத்தையுடைய ஜனநாயக கட்சி சகோதரர்களே, (அவர்களை நாம் இப்பொழுது பெற்றுள்ளோம்) உங்களிடம் இதை நான் மரியாதையுடன் கூறட்டும். அவர் சரியாக இருக்கக் கூடும். ஆனால் தலையைத் திருப்பும்படி செய்யும் ஒன்று அங்கு இருக்கிறது. நாம் அதே காரியத்தையே செய்துள்ளோம். அதற்கு நாம் பின்பு வருவோம். ஆகவே எவ்விதத்திலும் இந்த ஸ்திரீ அவனை நடத்தினாள். அவனுடைய கைகளை கட்டிவைத்தாற்போல் அவளுக்கு என்ன வேண்டுமோ அதைச் செய்ய வைத்தாள். அவள் ஆட்சியை நடத்தினாள். சிங்காசனத்தின் பின் அதிகாரமுடையவளாய் அவள் இருந்தாள். 22மேலும் யோசபாத் ஆகாபைக் காணும்படி அழைக்கப்பட்டான். இஸ்ரவேல் தேசம் கொண்டிருந்த சிறப்பான யாவையும் ஆகாப் அவனுக்குக் காட்டினான். இப்பொழுது, அது தான் ஒரு விசுவாசி அடைந்து கொள்ளக் கூடிய தவறான கூட்டாகும். யோசபாத் அவனுடன் ஐக்கியம் கொள்ளும்படி அங்கு சென்றபோது அவன் ஒரு தவறான வலையில் சிக்கினான். இப்பொழுது அனேக வேளைகளில் ஜனங்கள் நல்ல எண்ணத்துடன் அதைச் செய்யக்கூடும். ஜனங்கள் தவறாயிருக்கவேண்டும் என்று நினைப் பதில்லை. இன்றிரவு இங்கிருக்கும் அனேக ஜனங்கள் தாங்கள் பாவத்திலிருக்கக் கூடாது என்று எண்ணியபோதும் பாவத்தில் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். சில காலத்துக்கு முன்பு ஒரு அழகான இளம்பெண் மன நோய் மருத்துவ அறையில் இருந்தாள். அவள் ஒரு அவசரப்பிரிவு அறையில் இருந்தாள். நான் அங்கு சென்றேன். நான் பார்த்ததிலேயே அழகான பெண். அங்கே சிலர் சிகிச்சைக்கான உடைகளை உடுத்தியிருந்ததைக்கண்டேன. அவள், “சகோ. பிரன்ஹாம் என்னை முதலாவது நபராக அங்கு அழைத்துச் செல்வீரா?” என்றாள். நான், “உன்னை முதலாவதாகவா? நீ அந்த நோயாளிகளில் ஒருத்தியல்ல” என்று நினைத்தேன். ஆனால் அவள்.... 23மேலும் அவள், தான் எவ்விதமாக ஜீவித்தாள் என்று என்னிடம் கூறினாள். நான், “நீ அதைச் செய்யவேண்டுமென்று விரும்பவில்லை, இல்லையா?” என்று அவளிடம் கேட்டேன். அவள், “இல்லை ஐயா, நான் விரும்பவில்லை. ஏதோ காரியங்கள் அதைச்செய்ய என்னைத் தூண்டியது'' என்றாள். நான், ”அது பழமையான நாகரீகம் போல் தோன்றக்கூடும். ஆனால் அதைத் தூண்டியது சாத்தான்“ என்றேன். அவள், “நான் அதை எப்பொழுதும் நம்புகிறேன்” என்றாள். அந்தப்பெண்ணை தேவன் விடுதலையாக்கினார்... அவளுக்குத் திருமணமாகிக் குழந்தைகள் உள்ளனர். அவள் ஒரு சாராயம் குடிக்கும் பழக்கமுள்ள, விபசாரியான. ஓ அவளைப் போல் நீங்கள் ஒருக்காலும் பார்த்திருக்க முடியாது... அப்படிப்பட்ட கொடூர வாழ்க்கை . ஆனால் அது அப்படியே.... அவர்கள் அதைச் செய்யவேண்டும் என்று விரும்புவதில்லை. ஆனால் சில காரியங்கள் அவர்களைத் தூண்டுகிறது. அவர்கள் அதைச்செய்யவேண்டும் என்று விரும்புவதில்லை. நான் மது அருந்துமிடத்தில் சென்று குடிகாரர்களை நோக்கி, “உங்கள் பெயரென்ன ” என்று கேட்டேன். அவர்கள், “எனக்கு ஒரு மதுவை வாங்கித்தர முடியுமா?” என்று கேட்டனர். “இல்லை, உங்களுக்கு மதுவை நான் வாங்கித்தர மாட்டேன். நான் ஒரு தேவ ஊழியர்” என்றேன். “நீர் எழுந்து பாரும். நான் அதிகாரியாகப் பணிபுரியும் வங்கியை நீர் காணமுடியும்” என்றனர். அது மிகவும் உண்மையே. பாருங்கள். அவர்கள் அதைச் செய்யவேண்டுமென்றிருக்கவில்லை. சில காரியங்கள் அவைகளைச் செய்யும்படி அவர்களைத் தூண்டுகிறது. 24எனக்கு ஒரு சிநேகிதி உண்டு. அவள் இன்றிரவு இங்கு எங்கோ இருக்கக் கூடும். ரோசல்லா கிரிப்பின், எப்போதும் இங்குவரும் அவளை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அவள் சிக்காகோ நகரத்திலேயே மிகவும் மோசமான குடிகாரி. கட்டுப்பாடு இழந்து சச்சரவு செய்வது ரோசல்லாவிடம் கிடையாது. அவள் என்னுடைய ஹேம்மாண்ட் கூட்டத்திற்கு வந்திருந்தாள். பரிசுத்த ஆவியானவர் அவளை அழைத்து அவளைப்பற்றிய அனைத்தையும் கூறினார். அவள் குடிப்பழக்கத்திலிருந்து விடுதலையானாள். அவள் இப்பொழுது சிறைச்சாலைகளில் இருக்கும் குடிகாரர்களுக்கு மத்தியில் ஊழியம் செய்து வருகிறாள். சகோதரி ரோஸல்லா, நீ எங்கிருக்கிறாய்? இன்றிரவு இந்தக் கட்டிடத்தினுள் இருக்கிறாயா? ஆம், அவள் இங்கிருக்கிறாள். இங்கேயே, தேவனின் ஒரு பரிசுத்தவாட்டியாய் கிறிஸ்துவுக்கென்று தன்னை அர்ப்பணித்துள்ள ஒரு அருமையான நபராயிருக்கிறாள். மேலும் இப்பொழுது... நான் அவள் மேடையின்மேல் வருவதைக் கண்ட போது (சகோதரி ரோஸல்லா என்னை மன்னித்துக்கொள்) அவள் ஒரு... பரிதாபமான தோற்றத்துடனும் இயற்கைக்கு மாறான பார்வையுடனும், அருவருப்பான தோற்றமுள்ள சூனியக்காரி கிழவியைப்போல் இருந்தாள்.... ஓ, அப்படிப்பட்ட பார்வையுடையவளை நீங்கள் ஒருக்காலும் பார்த்திருக்க முடியாது. மேலும் நான் விரும்புவது.... நான் அவளை குறித்து குறை கூற வேண்டுமென்று கூறவில்லை. ஆனால் இன்றிரவு ரோஸல்லா அருமையான, அழகான அவளுடைய உண்மையான வயதைக் காட்டிலும் அவள் பார்ப்பதற்கு பதினைந்து, இருபது வயது குறைந்தவள் போல் காணப்படுகிறாள். மேலும் அவள் பின்பு ஒருபோதும் மதுவைத் தொடாத அருமையான வளாயிருக்கிறாள். சிக்காகோவில் பிரபலமான குடிகாரியாயிருந்து ஒரு மருத்துவமனையிலிருந்து வேறு மருத்துவமனைக்கு ஒரு மருத்துவரிடமிருந்து வேறு மருத்துவரிடத்திற்கு சென்றும் அவர்களால் கைவிடப்பட்டு நம்பிக்கையற்றவளாய் இருந்த அவள் வருடங்களுக்குப் பிறகு வருடங்களாக இருந்த அவள் அதோ அங்கே இன்றிரவு உட்கார்ந்துகொண்டிருக்கிறாள். ஆச்சர்யமான கிருபை. எவ்வளவு இனிமையாய் அது தொனிக்கிறது. அது என்னைப் போன்ற நிர்பந்தமானவர்களையும் இரட்சிக்கிறது. அதுவே அது. 25குடிகாரர்களே, தேவன் என்ன செய்யக்கூடும் என்று பாருங்கள். புற்றுநோயாளிகளே, தேவன் என்ன செய்யக்கூடும் என்று பாருங்கள். குறைந்த வளர்ச்சியுள்ள, ஊனமுள்ள கால்களை உடையவர்களே, தேவன் என்ன செய்யக் கூடும் என்று பாருங்கள். அவர் தேவன். அவர் ஏற்ற வேளையில் அங்கிருப்பார். இப்பொழுது, இந்த மனிதன் (யோசபாத்) தவறான கூட்டத்தில் சேர்ந்துவிட்டான் என்று பார்க்கிறோம். பாவிகளே, ஜனங்கள் ஆர்ப்பரித்ததை நீங்கள் கேட்டீர்கள். பெரிய கட்டி மறைந்தபடியால் இந்தவழியில் அவள் மகிமையினால் நிறைந்தவளாய் மகிழ்ச்சியினால் ஓடி, நிற்க முடியாதவளாய், ஒரு வார்த்தையும் பேசமுடியாதவளாய் அன்னிய பாஷைகளில் பேசியதை நீங்கள் கேட்டீர்களா? ஏன், அவள் மிகவும் தேவ வல்லமையினால் நிரப்பப்பட்டிருந்தபடியினால் கட்டிகள் மறைந்துபோனதினால் மகிழ்ச்சியால் தன் சொந்த பாஷையில் பேசக்கூடாதவளானாள். அவள் அப்படியே தேவனைத் துதித்துக்கொண்டிருந்தாள். பாருங்கள்? அவர்களை அவ்விதம் செய்யவைத்தது எது என்று வியப்படைகிறீர்கள் நல்லது, அதே காரியத்தை (விசுவாசத்தை - மொழிபெயர்ப்பாளர்) நீங்கள் உடையவர்களாயிருந்து பிறகு அது உங்களுக்கு என்ன செய்யப்போகிறது என்று கவனியுங்கள். பாருங்கள்? அது அதே காரியமாக இருக்கும். அவர் ஏற்ற நேரத்தில் அங்கிருப்பார். “ஏனெனில் வாக்குத்தத்தமானது உங்கள் பிள்ளைகளுக்கும், உங்கள் தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உரியதாயிருக்கிறது.” நீங்கள், “என் போதகர் மற்றும் என் சபை அதை விசுவாசிப்பதில்லை ” எனலாம். நல்லது, நீங்கள் - நீங்கள் தவறான கூட்டத்தில் கலந்து விட்டீர்கள். நீங்கள் தவறான கூட்டத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் பாருங்கள்? யோசபாத் அதைத்தான் செய்தான். அவன் தவறான கூட்டத்தில் கலந்துவிட்டான். அவன் அதிகமான மினுக்கைப் பெற்றான். ஆகாப் அவனுக்குத் தேசத்தின் மினுக்கான காரியங்களைக் காண்பித்தான். “நீங்கள் இன்னும் யேகோவாவில் விசுவாசம் கொண்டுள்ளீர்களா?” என்று யோசபாத் கேட்டிருப்பான் என்று நான் யூகிக்கிறேன். “ஓ, ஏன் நிச்சயமாகவே நாங்கள் யேகோவாவில் விசுவாசம் கொண்டுள்ளோம், நிச்சயமாகவே, நிச்சயமாகவே.” “சரி இப்பொழுது” என்றான். 26உலகம் உங்களை எங்காவது வரவேற்பதைக் காண்பீர்களானால், நினைவு கூறுங்கள், அவர்கள் வெட்டும்படியாக ஒரு கோடரியை உடையவர்களாய் இருப்பார்கள். பாருங்கள்? கிறிஸ்தவ குடும்பத்திலிருந்து வந்து ஒரு போதும் புகைபிடிக்காமலும் மது அருந்தாமலும் இங்கு வந்துள்ள இளம்பெண்ணே, உனக்கு புகைக்கும்படியாக ஒரு சிகரெட்டை தர ஒரு பெண் முயல்வாளானால் அவள் உன்னை வெட்டித்தள்ள ஒரு கோடரியை உடையவளாயிருக்கிறாள். அந்த வாலிபன் உன்னை ஒரு நடனத்திற்கு அழைத்துச் சென்றால் அங்கே உன்னை வெட்ட ஒரு கோடரி உள்ளது. பாருங்கள்? சற்றே கவனித்து அப்படிப்பட்ட கூட்டத்திலிருந்து வெளியே இரு. அதிலிருந்து விலகியிரு. அவர்கள் எவ்வளவு நல்லவர்கள் போல காணப்பட்டாலும் தீமைக்கு விலகியிரு என்று வேதம் கூறுகிறது. அதை விட்டு தூர இரு. பாவம் செய்யாமல் அக்கூட்டத்தில் இணைந்திருக்க முடியுமானாலும் கூட அதனின்று விலகியிரு. செய்யப்பட வேண்டிய காரியம் அதுவே. பாவம் செய்யாமல் அந்தக்கூட்டத்தில் செல்லக்கூடுமா என்று பார்க்காமல் உங்களால் அந்தக் கூட்டத்தைவிட்டு எவ்வளவு தூரம் விலகியிருக்கமுடியும் என்று பாருங்கள். மலைக்கு மேல் செல்லவேண்டும் என்றிருந்த ஸ்காட்லாந்துக் காரனைப்போல. அங்கே அவனுக்கு மூன்று ஓட்டுனர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன், “மிகப்பெரிய உச்சியாக இருக்கிறதே, பாதை அதுவரை செல்கிறதா?” என்றான். அவன், “அது தான் பாதை” என்றான். அவன், “நல்லது பாதை எவ்வளவு அகலமாய் உள்ளது?” என்று கேட்டான். அவன், “அந்தப்பாதை வண்டியின் சக்கரத்தினின்று பத்து அங்குலம் மட்டும் அகலமாக உள்ளது” என்றான். அவன், “அப்படியானால் ஒரு நல்ல ஓட்டுனரை தெரிந்து கொள்ளுங்கள்” என்றான். அவன், “கண்டிப்பாய் மலைக்குமேல் செல்ல வேண்டும். எனவே வாகனத்தை மேலே ஓட்டு” என்றான். ஓட்டுனர்களில் ஒருவன், “நான் என்னுடைய குதிரைகளை ஒரு இமைப்பொழுதில் வேகமாய் அந்த விளிம்புக்கு இரண்டு அங்குலம் தூரம், அருகே சென்று ஆனால் விழாமல் ஓட்டமுடியும்” என்றான். 27இரண்டாம் ஓட்டுநர் நடந்து வந்து, “நான் அந்தப் பாதையின் விளிம்புக்கு மூன்று அங்குல தூரம்வரை சக்கரம் இருக்கிறது போல் மிக வேகமாகவும் விழாமலும் போக முடியும்'' என்றான். மற்ற ஓட்டுநர் அங்கே அப்படியே நின்று கொண்டிருந்தான். அவன் அந்த ஓட்டுநரிடம் தன் விரல்களை நீட்டி, ”உன் காரியம் என்ன?“ என்று கேட்டான். அவன் ”ஐயா, நானும் அவ்விதமாக ஓட்டிச்செல்ல முடியும். ஆயினும் நான் அப்படிப்பட்ட ஒரு காரியத்தை மேற்கொள்ள மாட்டேன். நான் பாதையின் விளிம்பிலிருந்து எவ்வளவுதூரம் விலகியிருக்க விரும்புகிறீர்களோ அவ்விதமாக ஓட்டுவேன்“ என்றான். அவன், “நான் உன்னுடைய பிரயாணி” என்றான். அது தான் சரி. அது அப்படித்தான் இருக்கிறது. தேவனுக்கு முன்பாக இருப்பதற்கு மாறாக அவர்கள் கூட்டத்திலிருக்க என்ன செய்யலாம் என்று பார்க்காதே; பாவத்தினின்றும், அவர்களுடைய தன்மைகள், முறைமைகள், மற்றும் அவிசுவாசத்தினின்றும் எவ்வளவு தூரம் விலகியிருக்கமுடியும் என்று பார். தேவபக்தியற்ற ஒவ்வொரு காரியங்களிலிருந்தும் விலகியிரு. அதைவிட்டு தூரமாய்ப் போ. அதைவிட்டு விலகியிரு. ஒரு மனிதனோ, ஸ்திரீயோ கானானுக்குள் சென்று தேவனின் நன்மையானவைகளை ருசிபார்த்ததுண்டானால், பாவ காரியங்களைக் குறித்து கவலைப்படமாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் கானானின் நல்ல திராட்சப் பழங்களை ருசி பார்த்ததுண்டானால் அவர்கள் அதனின்று விலகியிருப்பார்கள். இப்பொழுது, யோசபாத் அங்கே வந்தான். ஆகாப் தேசத்தின் எல்லாப் பகட்டான காரியங்களையும் அவனுக்குக் காண்பித்தான். இப்போது அவன் இவனை வெட்டி வீழ்த்த ஒரு கோடரியை உடையவனாயிருந்தான். ஆகாப், “கீலேயாத்திலுள்ள ராமோத் நம்முடையதென்று உமக்குத் தெரியுமா? யோசுவா நமக்கு தேசத்தைப் பங்கிட்டபோது... நீர் அதற்கு ஓர் சாட்சியாயிருக்கிறீர். அது நமக்குரியதென்பதற்கு நீர் ஒரு சாட்சி. சீரிய ராஜா அதை உடையவனாயிருக்கிறான். ஆனால் அது நமக்குரியது” என்று சொன்னான். “இப்பொழுது அது உண்மையில்லையா?” என்றான். யோசபாத், “நிச்சயமாகவே அது உண்மை . ஏனெனில் நாம் அனைவரும் இஸ்ரவேலர்” என்றான். ஆகாப், “இப்பொழுது உம்முடைய சேனையை என்னுடைய சேனையுடன் ஒன்றுபடுத்தக் கூடுமா? நாமிருவரும் ஒன்றுபட்டால் நாம் அங்கு சென்று அங்கிருந்து சீரியரை விரட்டிவிடலாம். ஏனெனில் அது நம்முடையது” என்றான். அவர்கள் அதைக் காண்பிக்கக்கூடும்... உலகம் அதைக் காண்பிக்கக் கூடும். சாத்தான் மகத்தான பகட்டான காரணங்களை வேதவாக்கியங்களிலிருந்து காண்பிக்கக் கூடும். அவர்கள், “நல்லது, இப்பொழுது நாமெல்லோருமே தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். எல்லா ஜனங்களுமே தேவனின் குமாரர்கள்” என்று கூறுவார்கள். ஓ, இல்லை, இல்லை, இல்லை, இல்லை. நாமெல்லோரும் ஒரே காரியத்தை விசுவாசிக்கிறோம் என்று கூறுவார்கள். ஓ, நாம் அவ்வாறில்லை. இல்லை ஐயா, நாம் நிச்சயமாக அவ்வாறு இல்லை. 28எனவே அவர்கள், உங்களுக்குத் தெரியும். பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராட வேண்டுமென்று யூதா கூறியிருக்கிறாரென்று. விசுவாசத்திற்காக அல்ல, பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக. அது சரியே. விசுவாசத்திற்காக அல்ல, பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக போராட வேண்டும். மேலும் நீங்கள் அந்த விசுவாசத்தைப் பெற்றுக் கொள்ளும்போது, அந்த விசுவாசத்தை உடையவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும் என்று இயேசு கூறியுள்ளார். எனவே அப்பொழுது நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். (பாருங்கள்?) அன்றியும் அப்பொழுது நீங்கள் எப்படிப்பட்ட ஜீவியம் செய்கிறீர்கள் என்றும் அறிவீர்கள். எனவே யோசபாத், “ஏன், நிச்சயமாகவே நாம் எல்லோரும் ஒரே ஜனம். என் இரதங்கள் உம்முடைய இரதங்கள் - மேலும் - மேலும் என் குதிரைகள் உம்முடைய குதிரைகள். மேலும் - மேலும் என் யுத்த வீரர்கள் உம்முடைய யுத்தவீரர்கள். ஏன், நிச்சயமாகவே, நாம், இப்பொழுது ஒன்றுபட்டுள்ளோம்” என்றான். “நாம் அங்கு சென்று (என்னை மன்னியுங்கள்) ஏன் அவர்களைத் துரத்த முடியாது?” என்று கேட்டான். ஆனால் யோசபாத் சுற்றுமுற்றும் பார்த்து, அவன் சிந்தித்திருக்க வேண்டும், “நல்லது, ஒரு நிமிடம் பொறுங்கள்.... நாம் கர்த்தரிடத்தில் இதைக்குறித்து விசாரித்தறியவில்லையே” என்றான்.... பாருங்கள். ஒரு உண்மையான விசுவாசி அவன் யாதொன்றைச் செய்யுமுன்பு அது எவ்வளவு நன்றாகத் தோன்றினாலும் அவன் முதலாவதாக தேவனிடத்தில் ஆலோசனை கேட்பான். ஆமென். ஆம், ஐயா. உங்களுக்குத் தெரியும். நான் பார்த்திருக்கிறேன். அனேக வேளைகளில் ஜனங்கள் என்னிடம் வந்து, “ஓ, சகோ. பிரான்ஹாம், நீர் அங்கு வருவீரானால், நமக்கு அதிகமான நிதியளிப்பவர்கள் உண்டு, நாம் அதிகம் செய்யக்கூடும். எல்லா பணமும் கொடுத்துத் தீர்க்கப்படும் என்று நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு இரவும் அதிக காணிக்கை கொடுக்கப்படும்” என்கின்றனர். அதிகப் பகட்டானது. ஆனால் உங்களுக்குத் தெரியுமா? குரங்குகளும் கூட சில பொருட்கள் மீது பகட்டாகக் குதிக்கும். எனவே நாம் சற்றுக் காத்திருப்போம். போலித்தங்கம் உண்மையான தங்கத்தை பகட்டில் மிஞ்சிவிடும். 29நான் அன்றொருநாள் கிறிஸ்து ஜொலிப்புடையவர் என்றும் அவர் மினுக்குடையவர் அல்ல என்றும் கூறினதை அறிவீர்கள். நாம் நமது சபைகளைப் பகட்டாக்குவதினாலோ, பெரிதாய் ஆக்குவதினாலோ, நமது ஊழியர்களை சிறந்த கல்வியின் மூலம் மெருகேற்றுவதாலோ நாம் உலகத்தை மனந்திரும்பச்செய்ய முடியாது. அவர்கள் அந்தக் காரியங்கள் அனைத்தையும் ஏற்கனவே பெற்றிருக்கிறார்கள். அவர்கள் எல்லாவிதமான தத்துவங்களையும் பந்து விளையாட்டுகள் மற்றும் எல்லாவற்றையும் உடையவர் களாயிருக்கின்றனர். உலகம் அதைப் பெற்றுள்ளது. ஆனால் நாம் அவர்கள் பெற்றிராத ஒன்றைப் பெற்றுள்ளோம்... அது கிறிஸ்துவாயிருக்கிறது. பாருங்கள். அது சரியே. உங்கள் சொந்த எல்லைக்குள் தரித்திருங்கள். நாம் கிறிஸ்துவை உடையவர் களாயிருக்கிறோம். அவர்கள் கிறிஸ்துவை உடையவர்களாயில்லை. அவர்கள் எல்லா உளவியல் சாஸ்திரங்களையும் உடையவர் களாயிருக்கிறார்கள். அதைப்போன்ற காரியங்களால் அவர்களுக்கு சமமாக முயற்சிக்காதீர்கள். நீங்கள் அதைச் செய்யமுடியாது. அதில் அவர்கள் உங்களை வென்று விடுவார்கள். நீங்கள் ஒரு முறை ஒரு கத்தோலிக்கப் பாதிரியாரிடம் சென்று அறிவுத்திறன் போன்றவற்றால் அவரை மேற்கொள்ள முயற்சி செய்து பாருங்கள. வேதத்தைப் போன்ற பரிசுத்தமானதாக அவர்கள் கருத்தும் அறுநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் உடையவராகவும் அதை கற்றவராகவும் அவர் இருக்கிறார். எனவே சகோதரனே, அறிவுப்பூர்வமான காரியங்களினால் அவருக்கு சமமாகும்படி முயற்சி செய்யாதே. நான் அதை உங்களுக்குக் கூறுவேன். ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவியுடன் தரித்திருப்பீர்களானால் அதன் மற்ற காரியங்களை அவர் செய்வார் (பாருங்கள்) நீங்கள் அவரோடு தரித்திருப்பீர்களானால் (பாருங்கள்) நாம் அறிவுத்திறனை உடையவர்களாயிருக்க வேண்டியதில்லை. ஆனால் கிறிஸ்துவை உடையவர்களாயிருக்க வேண்டும். அதைத்தான் நாம் பெற்றிருக்கிறோம். அவர்கள் பெற்றிராத ஒன்றினை நாம் பெற்றிருக்கிறோம். எனவே நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன்பு, எப்போதும் கண்டிப்பாக கர்த்தரிடம் ஆலோசனை பெறவேண்டும். நீங்கள் சில காரியங்களைச் செய்யும்போது, அது தேவனுக்கு சித்தமானதாக இருக்குமானால் நீங்கள், “அது தேவனுக்கு சித்தமானால்” என்று கூறியாக வேண்டும். வேதம் நமக்கு அதனைக் கூறுகிறது. யோசபாத் தன்னுடைய தகப்பனார் தனக்களித்திருந்த நல்ல போதனைகளை நினைவுகூர்ந்தான். அவன், “நாம் தேவனைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா” என்று கேட்டான். 30பேராயரான ஆகாப், “ஓ, ஓ, ஏன், ஏன் நிச்சயமாக. ஆம் ஐயா. நான் - நான் - நான் அதைச் செய்ய வேண்டும் என்று நான் விசுவாசிக்கிறேன். நல்லது, நான் இங்கே வேதகலாசாலையில் பயின்ற போதகர்களான தீர்க்கதரிசிகளை உடையவனா யிருக்கிறேன்” என்று கூறுவதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. இப்பொழுது, அவர்களனைவரும் தீர்க்கதரிசி களாயிருந்தனர் என்பதை நினைவுகூருங்கள். “முழு வேதாகமப் பள்ளியை இங்கே உடையவனாயிருக்கிறேன்” என்று பேராயரான ஆகாப் கூறியிருப்பான் என்று என்னால் கற்பனை செய்ய முடிகிறது. “சரி. அவர்கள் எப்படிப்பட்ட தீர்க்கதரிசிகள்?” “யேகோவாவின் தீர்க்கதரிசிகள். நாங்கள் இங்கே அவர்களை உடையவர் களாயிருக்கிறோம். நல்லது நான் போய் அவர்களை இங்கு அழைத்து வருகிறேன்.” “அதுசரி. அது முற்றிலும் அருமையானது.” எனவே அவர்களனைவரும், எசேக்கியா மற்றும் அனைவரும் (சிதேக்கியா - மொழிபெயர்ப்பாளர்) வந்தனர். அவன் அவர்களுக்குள்- தலைமைப் பேராயராயிருந்தான். ஆகவே அவர்களெல்லாரும் ராஜவஸ்திரம் தரித்துக் கொண்டவர்களான இந்த ராஜாக்களுக்கு முன்பாக ஒலிமுகவாசலில் நானூறு தீர்க்கதரிசிகளும் வந்தபோது. நினைத்துப் பாருங்கள், நானூறு மாணாக்கர் - மாணாக்கர் அல்ல, அவர்கள் பேராயர்களாக ஆக்கப்பட்டிருந்த பெரிய மனிதர்களாயிருந்தனர். 31அவர்கள், “நாங்கள் ஜெபித்தோம், உபவாசித்தோம், கர்த்தரின் சித்தத்தை அறிந்து கொண்டோம். யேகோவா தேவன் போய் சுதந்தரித்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். ஏனெனில் அது நமக்குரியது, நம்முடையது. அதை நாம் எடுத்துக்கொள்ள அது நமக்குச் சொந்தமானது. நாம் போய் அதைச் சுதந்தரித்தும் கொள்வோம். இது கர்த்தர் உரைக்கிறதாவது'' என்றனர். ”நாம் அதனைச் சிந்தையில் கொண்டிருப்போம். அது சரி. அது நமக்கு அளிக்கப்பட்டது. ஊ... ஊ... அது சரியே“ என்றனர். இப்பொழுது, அந்த தீர்க்கதரிசிகள், ”நம்முடைய கோட்பாடுகளின்படியும், எண்ணங்களின்படியும், சிந்தையிலும் அது நம்முடையதென்று காண்போம். தேவன் அதை நமக்கு அளித்துள்ளார். அது நமக்குரியது. ஒரு புறஜாதி தேசம் அதைச் சொந்தமாக்கிக் கொண்டுள்ளது“ என்றனர். ஆகாப், ”என் தீர்க்கதரிசிகளைப் பாரும். போய் அதை சுதந்தரித்துக் கொள்ளும் என்று அவர்கள் ஒவ்வொருவரும் கூறுகின்றனர்“ என்றான். ஒரு மனிதன் எப்போதாகிலும் தேவனுடன் தொடர்பு கொண்டிருப்பானானால் சொல்லப்படுவது தேவனாலா இல்லையா என்பதை அவனால் கூற முடியும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். யோசபாத் அந்த தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை சிறுவேடிக்கை போன்று உணர்ந்தான். அவன், “மேலும் வேறு ஒருவர் இல்லையா?” என்று கேட்டான். ஆகாப், “இன்னும் ஒருவனா? தேசத்திலே, ஏன் உலகத்திலேயே நன்கு கல்விகற்ற, பயிற்சி பெற்ற சிறந்த உடையணிந்த நானூறு தீர்க்கதரிசிகள் இருக்கின்றனரே? நானூறு பேரும் ஏகவாக்காய் போ என்று கூறும் போது இன்னும் ஒருவனை ஏன் கேட்கிறீர்?” என்றான். ஆனால் யோசபாத்துக்கோ அங்கே அது வேடிக்கையான காரியம் போன்ற உணர்வுகள் தான் இருந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அங்கே ஏதோ காரியம் தவறாயிருந்தது. ஆகவே, இப்பொழுது, நீங்கள் பாருங்கள். நாமெல்லாரும் ஐக்கியப்பட்டால் அங்கே வல்லமை இருக்கும் என்று நினைக்கும் போது அது சரியான விதமான வல்லமையாக இருக்காமல் போகலாம். பாருங்கள்? எங்கே ஒற்றுமை, உடன்பாடு உண்டோ அங்கே வல்லமை உண்டு. அது சரி. நாம் நற்காரியங்களில் அவ்வாறு ஒன்று சேர்ந்து செல்லும்போது அது சரியே. ஆனால் நாம் திரும்பி வேதவார்த்தையை முதலாவதாக நோக்கவேண்டும். பாருங்கள். எனவே அவர்கள் தீர்க்க தரிசனம் கூறினர். 32அவ்விதமாகத்தான், உண்டாக்கப்பட்டதிலேயே முதல் ஸ்தாபனமாகிய நமது பிரசித்திபெற்ற கத்தோலிக்க சபை உண்டானது. ஸ்தாபனங்களைக் குறித்துக் கூறும்போது அவர்கள், “அங்கே நிசாயா ஆலோசனைச் சங்கம் கூடினதை நீங்கள் அறியவில்லையா? அவர்கள் அதில் வாக்களித்தபோது கத்தோலிக்கர்களைத் தவிர மற்றவர்கள் வெளியேற்றப்பட்டு இவர்கள் உள்ளே வந்தனர். நீங்கள் அதைக் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்” என்று கூறுகின்றனர். அவர்கள் அதை இன்னும் சீர்ப்படுத்தவில்லை. இல்லை ஐயா. தேவன், அது சரி என்று கூறும் போது அது சரியாயிருக்கும். தேவன், அதை சரி என்று கூறாதவரையிலும் அது சரியாயிருக்காது. அது எவ்வளவு பெரிதாயிருந்தாலும் எவ்வளவு மெருகூட்டப்பட்டதாயிருந்தாலும் அது மிகச்சரியாக அப்படித்தான் இருக்கிறது. சிறிது காலத்துக்கு முன் ஒரு போதகர், “சகோ. பிரன்ஹாமே அல்லது திருவாளர் பிரன்ஹாம்” (அவர் என்னை சகோ. பிரன்ஹாம் என்றழைக்கவில்லை) அவர், “திருவாளர் பிரன்ஹாமே, அந்த காரியம் கத்தோலிக்க சபை சரியானது என்பதை நிரூபிக்கிறது” என்றார். “அது காலங்களினூடாகவும் எவ்வாறு புயல்களைத் தாங்கி நின்றது” என்றார். என் ஜனங்கள் முன்பு கத்தோலிக்கர்களா யிருந்தனர் என்றும் நான் ஐரிஷ் இனத்தைச் சேர்ந்தவன் என்றும் அறிவீர்கள். எனவே அவர், “எல்லாக் காலங்களினூடாகவும் கத்தோலிக்க சபை எவ்வாறு நிலைத்திருந்தது என்று பாரும்” என்றார். நான், “அது ஒன்றும் இரகசியமில்லை . முழு தேசமும் மற்ற காரியங்களும் அதன் பின்னே இருந்தது. ஆனால் எல்லாமே அதற்கெதிராயிருந்தபோதிலும் இன்னும் நிலைத்து நிற்கும் பெந்தெகொஸ்தேயைப் பற்றி என்ன?” என்றேன். ஆமென். அது சரியே. எல்லாமே அதற்கெதிராக இருந்தது. ஆனால் எல்லாமே, நிச்சயமாகவே கத்தோலிக்க சபைக்குதவியாக இருந்தது. அதனால் தான் அது நிலைத்திருக்க முடிந்தது. ஆனால் எல்லாமே அதற்கெதிராயிருந்து, கொலைசெய்யப்பட்டு மற்ற எல்லாவற்றையும் சந்தித்த அவர்களை (பெந்தெகொஸ்தேயினர் - மொழிபெயர்ப்பாளர்) குறித்த காரியம் என்ன? அது எப்படி நிலைத்து நின்றது? மேலும் இன்று அவள் - இங்கு ஒரு டாலர் போல (ஆமென்.) ஆகாய மண்டலத்து நட்சத்திரங்களைப் போல ஜொலித்துக் கொண்டிருக் கிறாள். ஆமென். என்றைக்கும் ஜொலித்துக் கொண்டிருப்பாள். 33இப்பொழுது கவனியுங்கள், இந்த யோசபாத், “அங்கே ஏதோ சில காரியங்கள் தவறாயுள்ளது'' என்றான். அவன் தன்னுடைய உள்ளத்தின் ஆழத்தில் ஏதோ தவறாயுள்ளதென்று உணர்ந்தான். ”ஆனால் இங்கு எங்காகிலும் வேறு ஒரு தீர்க்கதரிசி இல்லையா?“ என்று கேட்டான். ஆகாப், ”ஆம், ஒருவன் இருக்கிறான். அங்கே இம்லாவின் குமாரனாகிய மிகாயா இருக்கிறான். ஆனால் நான் அவனை வெறுக்கிறேன்“ என்றான். ஓ, ஓ, யோசபாத் இப்பொழுது தான் சரியான பாதையில் இருப்பதை அறிந்துகொண்டான். அவன், ”இராஜா அப்படிச்சொல்லாதிருப்பாராக. அவனை அழைத்து வரும்படி செய்யும்“ என்றான். ஆகாப், “நல்லது, இந்த முழு (தீர்க்கதரிசிகளின்) ஸ்தாபனமுமே அது சரியென்று கூறும்போது அந்த இன்னும் ஒருவன் எதற்காக தேவைப்படுகிறான்? அது இன்னும் எனக்கு சரியாக தென்படவில்லை. இல்லை. சற்றேனும் இல்லை” என்றான். யோசபாத்தோ, “இல்லை, நான் அந்த இன்னும் ஒரு (தீர்க்கதரிசியை) வனை உடையவனாயிருக்க விரும்புகிறேன்” என்றான். எனவே அவன், “அவனுடைய பெயர் என்னவென்று கூறினீர்?” என்று கேட்டான். ஆகாப், “அவன்பெயர் மிகாயா, அவன் இம்லாவின் குமாரன்” என்றான்.“நல்லது, அவனை அழைத்து வாருங்கள். அவன் அதைக்குறித்து என்ன கூறுகிறானென்று பார்ப்போம்” என்றான். ஏனெனில் அங்கிருந்த வேடிக்கையான எண்ணங்கள் அது சில சமயங்களில் வார்த்தையுடன் ஒத்துப்போகாது. எனவே அவர்கள் அனுப்பினர். ஆகாப் ஒரு ராணுவ வீரனை அனுப்பி அங்கு எங்கோ இருக்கும் இம்லாவை அழைத்துவர - அவன் இம்லா அல்ல, அவன் இம்லாவின் குமாரன் மிகாயாவைக் குறிப்பிடுகிறேன். அவன் அந்த வனாந்தரத்தில் எங்கோ ஒரு சிறு இடத்தில் இருந்தான். அவன், “இப்பொழுது மிகாயா, நீதான் மிகாயா தீர்க்கதரிசியா?” என்று கேட்டான். அவன், “ஆம். நான் தான்” என்றான். அவன், “நீ கனமடையப் போகிறாய் என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான். அவனிடம் தேவன் ஏற்கனவே பேசியிராதது போல், “ஓ, நானா?” என்றான். நீங்கள் அறிவீர்கள். எனவே அவன், “நானா” என்று கேட்டான். 34“ஆம். ஆமாம். ஒரு பிரசங்கிமார்களின் கூட்டம் கூடப்போகிறது. நீ அங்கு அழைக்கப்படப் போகிறாய். அங்கே அவர்கள் கூடியிருக்கும் வெள்ளை மாளிகைக்கு நீ போகப்போகிறாய். மிகாயாவே, நீ நினைத்துப் பார்த்திராத ஒருக்காலும் பெற்றிராத ஒரு கனம் - ஆனால் அதை நீ பெறப்போகிறாய். ஒரு சிறிய கல்வியறிவில்லாத, பின்னால் உட்கார்ந்திருக்க வேண்டியவனான உன்னை ராஜாவுக்கு முன்பாக அழைத்து வரவேண்டு மென்றிருக்கிறார்கள். மேலும் அவர்கள் - அவர்கள் - இப்பொழுது கவனி. தீர்க்கதரிசிகளின் கலாசாலையாகிய அந்த ஊழியர் ஐக்கியத்தின் சர்வதேச ஸ்தாபனம் எங்குள்ளதென்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான். ஆம், அங்குள்ள எல்லோரையும் குறித்து எனக்கு அனைத்தும் தெரியும். “நல்லது, உனக்குக் கண்டிப்பாக அங்கே உள்ள தீர்க்கதரிசிகளின் மிகப்பெரிய தலைமைப்பேராயர் ஏசேக்கியாவை (சிதேக்கியா-மொழி பெயர்ப்பாளர்) அறிந்திருப்பாய்.” “ஆம், நான் அவரைக்குறித்து அறிவேன். ஆம், அவர் பெரிய மனிதர் என்று அவர்கள் கூறுகின்றனர்.” “ஆம், அவர் அப்படி L.L., Ph.D., D.D.D., Q.S. போன்றவற்றையெல்லாம் பெற்றிருக்கிறார் என்று அவர்கள் கூறுவதை நீர் அறிவீரா?” “ஆம், நான் அறிவேன்.” “நல்லது, அவருடன் அவர்களனைவரும் ஒரு மனப்பட்டு கூடிவந்து ஒரு காரியத்திற்காக ஜெபித்திருக்கின்றனர். அவர்கள் உபவாசித்து ஜெபித்தனர். அவர் இரண்டு பெரிய இரும்புக் கொம்புகளை உண்டாக்கிக் கொண்டார். அவர் கர்த்தரிடத்திலிருந்து வார்த்தையைப் பெற்றுக்கொண்ட நிச்சயத்தை உடையவராயிருக் கிறார்.” “அவன் (சிதேக்கியா) ராஜாக்களுக்கு முன்பாக வந்து இந்த பெரிய கொம்புகளை எடுத்துக்கொண்டு, 'நீர் இதைக்கொண்டு சீரியரை முட்டி பாதையினின்று அகற்றி விடுவீர். நாம் தேவனுடைய சுதந்தரத்தைக் கட்டிக்கொள்வோம். ஆமென்' என்று கூறியிருக்கிறார்” என்றான். 35அதைத்தான் நமது ஸ்தாபனங்களில் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். நாம் எல்லாரையும் பின்னுக்குத் தள்ளி அவர்களை ஒருத்துவக்காரர்களாக்கினோம்; அவர்களை திரித்துவக் காரர்களாக்கினோம்; அவர்களை அசெம்ப்ளீஸ் தேவ சபையினராக் கினோம். அவர்களையெல்லாம் பாப்டிஸ்டுகளாகவோ, மெத்தடிஸ்ட்டு களாகவோ, மாற்றினோம். ஆனால் நம் இரும்புக்கொம்புகள் கிரியை செய்யாது. அது சரியே. அது சரி. நீங்கள் அதை அவ்விதம் செய்யாதீர்கள். நீங்கள் அவர்களைக் கீழே தள்ளிவிடமுடியாது. “நீர் முட்டித்தள்ளி அவைகளைச் சுதந்தரித்துக் கொள்வீர்.'' நீங்கள் அந்தச் சகோதரர்களை வெட்டித்தள்ளாத வரைக்கும் நமது ஸ்தாபன முறைமைகள் சரியானது தான். மற்ற சகோதரர்களை வெட்டித்தள்ளும் போது நீங்கள் தவறாயிருக்கிறீர்கள். அவர்கள் அதைத் தான் செய்கின்றனர். அதுதான் ஸ்தாபனங்களின் பின்னனியாக இருக்கிறது. அது மற்ற சகோதரர்களை வெட்டிப் புறம்பே தள்ளுகிறது. எனவே பிறகு நாம் காண்கிறோம். அவன், “நல்லது, அந்த ஊழியர்களின் சங்கமே கூறியிருக்கிறதே” என்றான். “நான் இப்பொழுது உங்களுக்கு கூறப்போகிறேன். அந்தப் பெரிய தீர்க்கதரிசி கூறியதை அறிந்திருக்கிறேன். அவர் கூறினவாறே நீயும் கூறு. நீ அவ்வாறு செய்தால் அங்கு வரும்போது உன்னை அந்த சங்கத்திற்கு அழைத்துச்செல்வோம். உன்னை எங்களில் ஒருவனாக ஆக்குவோம். நாங்கள் உனக்கு சொல்வதெல்லாம் அவர் கூறினதையே கூறு. அப்பொழுது உன்னை எங்கள் குழுவில் சேர்த்துக் கொள்வோம்.” 36ஆனால் சகோதரனே, அவன் அப்படியில்லாத ஒரு மனிதனிடம் அதைக் கூறினான். மிகாயா, “தேவன் கூறுவதையேக் கூறுவேன். அவ்வளவு தான்” என்றான். ஆமென். நான் அதை விரும்புகிறேன். ஆம் ஐயா. “தேவன் கூறுவதையே நான் கூறுவேன்.” எனவே முடிவில் அங்கு ராஜாக்களுக்கு முன்பாக வந்து சேர்ந்தனர். மேலும் (மிகாயா) முந்தின இரவில் தேவனுக்கு முன்பாக இருக்கையில், தான் என்ன கூறவேண்டும் என்பதை அறிந்தான். எனவே அவர்கள் ராஜாவிற்கு முன்பாக வந்தார்கள். அங்கே ராஜாவிற்கு முன்பாக முழு வேதாகம கலாசாலை தீர்க்கதரிசிகளும் நின்று தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்தனர். இப்பொழுது அவர்கள் புறஜாதியாராகிய தீர்க்கதரிசிகளல்லவென்று நினைவு கூருங்கள். அவர்கள் யேகோவாவின் தீர்க்கதரிசிகள் என்றழைக்கப் பட்டனர். ஆனால் இப்பொழுது சற்று கவனியுங்கள். எனவே அவர்கள், அவர்கள் எல்லோரும் கூறிய பிறகு... அவர்கள் எல்லோரும் தீர்க்கதரிசனம் உரைத்து, “ஆம், கர்த்தர் இப்பொழுதும் கூட, 'போங்கள். நான் உங்களோடே இருக்கிறேன். பட்டணத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள்' என்று கூறுகிறார்” என்றனர். மிகாயா சுற்றிலும் பார்த்து, “முன்னேறிப் போங்கள். பட்டணத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள்” என்றான். ஆகாப் அதில் ஏதோ தவறுண்டென்று அறிந்து கொண்டான். “உன்னை எத்தனை முறை ஆணையிடச் செய்யவேண்டும்?” என்று கேட்டான். அவன் (மிகாயா), “நிச்சயமாக முன்னே போய்ப்பட்டணத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள். ஆனால் நான் இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல், மலைகளிலே சிதறடிக்கப் பட்டதைக் கண்டேன்” என்றான். ஆகாப் தன் நீதி அவமதிக்கப் பட்டதைக்கண்டு கொதிப்படைந்தான். அவன், “நான் என்ன கூறினேன்? அவன் தீமையாகவே தீர்க்கதரிசனம் கூறுபவன். அவன் கூறுவதெல்லாம் நமது ஸ்திரீகள் குட்டைக்கால் சட்டை அணிவது போன்ற இந்தக் காரியங்களைத் தான்.... அவன் எப்பொழுதுமே என்னைக் குறித்து தீமையாகவே ஏதாவது கூறுபவனென்று அறிவேன். அங்குபோய் நின்றவுடனே அவன் கூறப்போவது அதுவே” என்றான். அவனால் வேறு என்ன கூறமுடியும்? அவன் (மிகாயா), “நான் இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் மலைகளில் சிதறடிக்கப்பட்டதைக் கண்டேன்” என்றான். ஓ, என்னே, அது அவனுடைய (ஆகாபுடைய) மரணத்தைக் குறிக்கிறது என்று அவன் அறிந்திருந்தான். அவன் கூறினான். ஓ, அவன் அதைக்குறித்து கொதிப்படைந்தான். “அவன் என்னைக்குறித்து தீமையாகவே தீர்க்கதரிசனம் கூறுகிறவன் என்று நான் கூறவில்லையா?” என்றான். 37நல்லது, அதைத்தவிர மற்ற காரியங்களை அவனால் எப்படி கூறமுடியும்? எனெனில் அவன் தனக்குக் கிடைத்த தரிசனத்தை தேவனின் வார்த்தையுடன் ஒப்பிட்டுப்பார்த்தான். தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசியாகிய எலியாவின் மூலம் தேவனுடைய வார்த்தையானது ஆகாபின் இரத்தத்தை வயல்களில் அல்லது இரதத்தின் மீது நாய்கள் நக்கும் என்று கூறப்பட்டிருந்ததை அவன் அறிந்திருந்தான், ஆகாபின் இரத்தத்தை நாய்கள் நக்கும் என்பதை. மேலும் தேவன் ஆகாபுக்கு விரோதமாயிருந்தார். எனவே, தேவனால் சபிக்கப்பட்டவனை இந்த தேவனுடைய மனிதன் எப்படி ஆசீர்வதிக்க முடியும்? எப்படி ஓர் தேவ ஊழியன் பீடத்தில் இருந்துகொண்டு தன்னிடம் ஜனங்கள் ஒன்றும் கூறாதிருக்கையில் அவர்கள் செய்தவற்றைக் கூறமுடிகிறது? நான் கூறுவதைக்காட்டிலும் அது அதிகமானது. சீனாவில் அவர்களின் முற்காலத் தத்துவமேதை கன்பூசியஸ், அவர்களுடைய மகத்தான தேவனாக அழைக்கப்படுவதை நீங்கள் அறிவீர்கள். கன்பூசியஸ் என்பது சீனாவில் ஒரு வார்த்தையாக இருக்கிறது. அமெரிக்காவில் அந்த வார்த்தை கன்பூசியஸ் என்பதற்குப் பதிலாக குழப்பம் (confusion) என்றுள்ளது. - ஓ, இதிலிருந்து நீங்கள் ஒரு வரைபடத்தைப் பெறமுடியும். சிறிது காலத்திற்கு முன்பு நான் (யாரோ என்னை அழைத்திருந்தனர்) ஒரு இடத்திற்கு உணவருந்த சென்றிருந்தேன். மேலும் அங்கு அநேக வகையான வண்ணங்கள் இருந்த இடத்தில் ஒரு வண்ணதிரவம் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தை என் மகன் ஜோசப் எடுத்து சுவர் முழுவதும் அலங்கோலமாக பூசியது போன்று அது காணப்பட்டது. நான், “இதைப்போன்ற ஒரு அருமையான சுவரில் ஒரு அசிங்கமான தோற்றமுடன் ஒரு சித்திரம் சுவரில் தொங்கவிடப்பட்டிருக்கிறதே” என்றேன். “ஓ (நான் பணிப் பெண்ணிடம் கேட்டேன்)” அவள், “நல்லது, அது தோல் துணியின் மீது” என்றாள். நான், “அது நிச்சயமாகவே துளித்துளியாக ஒரு வகையான அலங்கரிப்புக்காக செய்யப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது” என்றேன். அவள், “ஓ” என்றாள். அவள், “ஐயா, அது இன்னார் மற்றும் இன்னாரால் வர்ணம் தீட்டப்பட்டது” என்றாள். ஏன், அது ஒரு வண்ணச்சித்திரம் போலக்கூட இல்லை. மேலும் சுவரில் உள்ள அந்த வண்ணச்சித்திரம் எவ்வளவு நூறு டாலர் மதிப்புப்பெறும் என்பதை மறந்துவிட்டேன். நான், “நல்லது, அது நானாக இருந்தால் அங்கிருந்து அதை எடுத்துவிட அவ்வளவு டாலர்களைக் கொடுத்திருப்பேன். ஏனெனில் அதைப்பார்ப்பது சாவுக்கேதுவாக கவலையுண்டாக்குவதாகவும் அருவருப்பூட்டுவதாகவும் காணப்படுகின்றது” என்றேன். நீங்கள் அறிவீர்கள். கருப்பு கருப்பாகவும் வெண்மை வெண்மையாகவும் இருக்கவேண்டும். அவையிரண்டையும் நீங்கள் ஒன்றாகக் கலந்தால் சாம்பல் நிறத்தைப் பெறுவீர்கள். அது அந்த வகையில்தான் இருக்கிறது. அவர்கள் அவ்விதமாய் கலந்திருக்கிறார்கள். தவறானதிற்கும் சரியானதிற்கும் இடையேயுள்ள வரைவுக்கோடு எது? மெத்தோடிஸ்ட்கள் சரியென்றால் பாட்டிஸ்ட்டுகளைக் குறித்தென்ன? பிரிஸ்பிடேரியன்கள் சரியென்றால் பெந்தெகொஸ்தேயினரைக் குறித்தென்ன? அங்கு எங்கோ ஒரு வரைவுக்கோடு உள்ளது. அந்த வரைவுக்கோடு தேவனின் வார்த்தையே. அது தான் வார்த்தை. தேவனின் வரைவு கோடு அவருடைய வார்த்தையே. “எல்லா மனுஷரின் வார்த்தையும் பொய். என்னுடைய(தேவனின்) வார்த்தையே சத்தியம்.” 38எனவே தேவன் சபித்ததை நாம் எப்படி ஆசிர்வதிக்க முடியும்? எப்படி மனிதர்கள் இரண்டு மூன்று முறை திருமணம் செய்தும் அவர்களை நீங்கள் சபைகளில் மூப்பர்களாக அனுமதிக்க முடியும்? பெண்கள் முடியைக் கத்தரிக்கவும், குட்டை கால்சட்டைகளை அணியவும் நீங்கள் எப்படி அனுமதிக்க முடியம்? மேலும் பாலுணர்வைத் தூண்டும் உடைகளை உடுத்திக்கொண்டு பீடங்களின் மேல் ஏறி பியானோ வாசித்துவிட்டு, தெருவில் சென்று சுற்றித்திரியும் அவர்களைக் குறித்து ஒன்றும் கூறாமலிருப்பது எப்படி? நீங்கள் அதனைத் தடுத்து நிறுத்தி விடமுடியாது. ஆனால் நீங்கள் அதற்கு எதிராக ஏதாவது கூறமுடியும். மேலும் தொண்ணூற்றைந்து சதவீதம் பெண்கள் சிகரெட் புகைத்துக் கொண்டும் மது அருந்திக் கொண்டும் வாழ்கின்றனர். சிறிது காலத்துக்கு முன்பு ஒரு கல்லூரியின் வளாகத்திலிருந்தேன். அங்கு இளம்பெண்கள் குட்டைகால் சட்டையுடன் சுற்றிக் கொண்டிருந்தனர். மதுப்புட்டிகள் அங்கு எங்கும் கிடந்தது. ஊழியக்காரர்கள் சுவிசேஷத்தைக் குறித்து வேடிக்கையாய்ப்பேசிச் சிரித்துக்கொண்டிருந்தனர். நல்லது, அடுத்த சந்ததி நன்றாக இருக்கவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? அவர்கள் என்னவாக இருக்கப் போகிறார்கள்? வரைவு கோடு எங்கு இருக்கிறது? டாக்டர் ஸ்பர்ஜன் என்ற ஒரு வயதான பாப்டிஸ்ட் நண்பரை உடையவனாயிருக்கிறேன். அவர் எப்பொழுதுமே... “நாம் ஜன்னல் கம்பிகளைக் கீழே இழுத்துவிட்டு பாவத்துடன் சமரசமாகிவிட்டோம். நாம் ஜன்னல் கம்பிகளை கீழே இழுத்து செம்மறியாடுகளை வெளியே தள்ளிவிட்டோம். ஆனால் வெள்ளாடுகள் எப்படி உள்ளே வந்தது?” என்ற பாடலைப் பாடுவதுண்டு. அது நீங்கள் கம்பிகளைக் கீழே இழுத்து விடும்போது தான். அது தான் அதைச் செய்தது. 39தேவன் செய்வதைக் காட்டிலும் அதைக் குறித்து அதிகம் அறிந்திருக்கும் இளம் கல்லூரி மாணவர்களாகிய நீங்கள் அதுபோன்ற சில உபதேசங்களை உருவாக்குகிறீர்கள். அந்த விசித்திரமான அபிப்ராயங்களை தூர விலக்கிப்போடுங்கள். தேவனுடைய வார்த்தைக்குத் திரும்புங்கள்! “நல்லது, அது இதை கூறுகிறது. அது இதைச் செய்தது” என்று கூறினாலும் அது ஒரு காரியமல்ல. அது முற்றிலுமாக தேவவார்த்தையாக இருக்க வேண்டியதாயுள்ளது. இயேசுகிறிஸ்து இன்றும் வியாதியஸ்தரை சுகமாக்கும் ஒரு மனிதனைப் போல், சுகமாக்குபவராக மட்டுமின்றி அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்... மரித்த தேவனல்ல..... அவர் ஜீவனுள்ள தேவனாயிருக்கிறார். ஒரு பழமையான தேவனைக்குறித்துப் பேசி அந்த தேவன் அதே தேவனாக இன்று இராமற்போனால் என்ன நன்மையை செய்யக் கூடும்? நிச்சயமாக, நீங்கள் ஒரு வரையப்பட்ட நெருப்பிலிருந்து வெப்பத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. எனவே நீங்கள் அதை ஒரு காலத்தில் உடையவர்களாயிருந்தீர்கள். நாம் இப்பொழுது ஏதோவொன்றை உடையவர்களாயிருக்க வேண்டியதாயுள்ளது. அதே தேவன் இன்றும் ஜீவிக்கிறார், அவர் இன்றும் சுகமாக்குகிறார், அவர் இன்றும் இரட்சிக்கிறார், அவர் இன்றும் பரிசுத்த ஆவியைக் கொடுக்கிறார். மேலும், அவர்.... மேலும் அது, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற அதே இயேசு கிறிஸ்துவாயிருக்கிறார். எனவே இப்பொழுது பாருங்கள், மிகாயா முதலாவதாக அவனுக்குக் கிடைக்கப்பெற்ற தரிசனத்தின் மேல் தன் விசுவாசத்தை வைத்தான். அதன் பிறகு அந்த தரிசனத்தை அவன் தேவ வார்த்தையுடன் ஒப்பிட்டுப்பார்த்தான். அப்பொழுது அவன் தான் சரியாயிருப்பதை அறிந்து கொண்டான். அந்த விதமாகத்தான் நாம் அதைச் செய்ய வேண்டும். நமது வேதசாஸ்திரம் தேவனுடைய வார்த்தையை எடுத்துக்கொள்ளுமானால், நாம் செய்கிற காரியங்கள் முற்றிலுமாக வேதாகமத்தின்படி நீங்கள் அதைச் செய்வீர்களானால் நீங்கள் சரியாக இருப்பீர்கள். ஆனால் அவ்வாறில்லையெனில் அதை விட்டுவிடலாம். தேவன் எதைச் சொன்னாரோ அதைச் செய்பவனையே ஆசீர்வதிப்பார். 40இப்பொழுது நாம் ஆகாப் ஒரு சபிக்கப்பட்ட நபர் என்று காண்கிறோம். ஏனெனில் அந்தத் தீர்க்கதரிசி... அவன், “நான் ஒரு தரிசனம் கண்டபோது...'' என்றான். அவன் ஒரு தரிசனம் கண்டபோது தேவன் சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்திருப்பதைக் கண்டதாகக் கூறினான். மேலும் அவன் பரலோகத்தின் சேனைகள் அவருடைய வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் நின்றிருந்தனர். அவர்கள் ஒரு ஆலோசனை சங்கத்தை கொண்டிருந்திருக்க வேண்டும் என்றான். ”எலியாவின் வார்த்தை நிறைவேறும்படி ஆகாபை வஞ்சித்து அங்கே போர்க்களத்துக்கு கொண்டு வந்து கொல்லப்பட அங்கே போய் ஆகாபுக்கு போதனை செய்பவன் யார்“ என்று தேவன் கேட்டார். (இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள்) மகிமை அல்லேலூயா. தேவன் எவ்வளவாய் தம் வார்த்தைக்கு பின்பலமாக இருக்கிறார். அது ஒரு தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டதாகும். ஆனால் இயேசு, “எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து, நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால் அவன் சொன்னபடி ஆகும்” என்று கூறியுள்ளார். அது நம்முடைய கர்த்தர் உரைத்த வார்த்தை என்று நீங்கள் அறியும்போது; அதன் காரணமாகத்தான் பெரிய கட்டியையுடைய வளாயிருந்த ஸ்திரீ, புற்றுநோயுடையவளாயிருந்த ஸ்திரீ, மற்றும் பல்வேறு வியாதிகளையுடையவர்களிடம் நீங்கள் சுகமாவீர்களென்று நான் கூறமுடிந்தது. ஏனெனில் முதலாவதாக அது ஒரு தரிசனமாயிருக்கிறது. அது வார்த்தையுடன் ஒப்பிட்டுப் பார்க்கப் படுகிறது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அங்கே தரிசனம் இருக்கிறது. பிறகு அது சம்பவிக்கிறது. இது “கர்த்தர் உரைக்கிறதாவது.” எனவே அது சம்பவித்தாக வேண்டும். அதை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது. பாருங்கள்? 41இப்பொழுது, எலியா இதனை தீர்க்கத்தரிசனமாக உரைத்து அநேகநாள் சென்றிருந்தது. அவன் மகிமைக்குள் பிரவேசித்து அநேக நாட்களாகி விட்டது. ஆனால் அவன் இந்த தீர்க்கதரிசனத்தை உரைத்தான். அது நிறைவேறுமென்று அறிந்திருந்தான். மேலும் மிகாயா, எலியா தேவனுடைய மனுஷன் என்றும் எலியாவின் வார்த்தையை நிறைவேற்றுவதற்கு தேவன் ஒரு ஆலோசனைச் சங்கத்தை பரலோகத்தில் கூட்டியிருந்தார் என்றும் அறிந்திருந்தான். நீங்கள் கர்த்தரின் வார்த்தையை பெற்றிருந்து, கர்த்தரின் வார்த்தையை உரைத்து அவருடைய வார்த்தையை சந்தேகப்படாமல் இருந்தால், நீங்கள் உரைத்த வார்த்தையை சம்பவிக்கச் செய்யும்படி ஒரு ஆலோசனைச் சங்கத்தைக் கூட்டுவார். ஏனெனில் அது உங்கள் வார்த்தை அல்ல. அது அவருடைய வார்த்தை. அது கர்த்தர் உரைக்கிறதாவது என்றிருந்தால், மெய்யாகவே அது கர்த்தர் உரைக்கிறதாவது என்றிருந்தால், அது அவருடைய வார்த்தையாயிருக்கும்.... இப்பொழுது கவனியுங்கள். அங்கே அவர்கள் ஆலோசனைச் சங்கத்தை உடையவர்களாயிருந்தனர். எனவே ஒரு ஆவி தேவனுக்கு முன்பாக வந்தது. கண்டிப்பாக அது கீழான இடங்களிலிருந்து தான் வந்திருக்க வேண்டும். சந்தேகத்திற் கிடமின்றி அது தேவனைப் பணிந்து கொண்டு, “தேவனே, அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று நன்கு அறிவேன்” என்றது. தேவன், “உன் திட்டம் என்ன?” என்று கேட்டார். அது, “நான் போய் அந்தப் பிரசங்கிமார்களின் தீர்க்கதரிசனத்தைப் பொய்யாக்கி விடுகிறேன். ஏனெனில் அவர்கள் எப்படியும் வேதவார்த்தைகளை அறிந்திருக்கவில்லை” என்றான். அவர்கள் வார்த்தையை அறிந்திராதபடியினால் நான் போய் அவர்கள் தீர்க்கதரிசனங்களைப் பொய்யாக்கி விடுகிறேன்“ என்றது. அப்படிச் செய்வதனால் அவனை (ஆகாபை) எழும்பி வரச்செய்து அவனை அங்கே கொண்டு வருவேன். அப்பொழுது (தேவனே) நீர் எலியாவின் வார்த்தையை சம்பவிக்கும்படி செய்ய அவனை அங்கே கொன்று போடமுடியும்” என்றது. எனவே அவர் (தேவன்), “நீ போய் அப்படியே அவனைத் தூண்டு” என்றார். 42ஒரு எளிமையான அரைகுறையாய் காணப்பட்ட மிகாயா அங்கு நின்று இந்த வார்ததைகளைக் கூறக்கேட்ட பேராயர் என்ன நினைத்திருப்பான் என்று நீங்கள் கற்பனை செய்ய முடியும். அவன் போய் அவனுடைய கன்னத்தில் அறைந்து, “என்னிடத்திலிருந்து தேவ ஆவி எந்த வழியாய் என்னை விட்டு உன்னிடத்தில் வந்தது?” என்றான். அவன், “நீ அதை குழியில் பதுங்கும் நாளில் காண்பாய்” என்றான். எலியா உரைத்திருந்த தீர்க்கதரிசனத்துடன் மிகாயா தான் பெற்ற தரிசனத்தை வேதவார்த்தையுடன் ஒப்பிட்டுப் பார்த்தான். இப்பொழுது உங்கள் விசுவாசம் கூறுமானால்... இப்பொழுது உங்களில் எத்தனை பேர் கிறிஸ்துவின் மூலம் தெய்வீக சுகமளித்தல் என்கிற அப்படிப்பட்ட காரியம் உண்டென்று விசுவாசிக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அது சரி, இன்றிரவு எத்தனை பேர் நீங்கள் சுகமாக்கப்படப்போகிறீர்கள் என்று விசுவாசிக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். நல்லது, அங்கே உங்கள் வெளிப்படுதலை தேவ வார்த்தையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போது அது சம்பவித்தாக வேண்டும். ஆமென். நீங்கள் மெய்யாய் விசுவாசிப்பீர்களானால் அவர் அதைச் செய்தேயாக வேண்டும். இப்பொழுது உங்கள் விசுவாசம் பாவனை விசுவாசமாக இருக்க வேண்டாம். அவன் பிதற்றமாட்டான்; சாத்தான் பிதற்றுகிறவன் அல்ல. ஆனால் நீங்கள் நல்ல விசுவாசத்தை உடையவர்களாயிருக்க வேண்டும். 43பிசாசுகளைத் துரத்த இயேசு வல்லமையைக் கொடுத்து பத்து நாட்களுக்குப் பின்பு அவர்கள் ஒரு சந்திரரோகியின் காரியத்தில் தோல்வியடைந்தவர்களாய் நின்றதைக் காண்கிறோம். அவர்களில் ஒருவனாகிய அந்திரேயா, “இப்பொழுது நான் அதைப் பிலிப்பி பட்டணத்தில் செய்திருக்கிறேன். அது இங்கே இருக்கிறது. அங்கிருந்து வெளியே வா, பிசாசே! அங்கிருந்து வெளியே வா, பிசாசே!” என்று கூறுவதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. இல்லை, அவன் (பிசாசு) வெளியே வரவில்லை. பேதுரு, “உனக்கு அதை எவ்வாறு துரத்துவது என்று தெரியவில்லை. அதை கப்பர்நகூமில் நாம் இவ்விதம் துரத்தினோம். அதை எப்படிச் செய்வது என்று நான் உனக்குக் காண்பிக்கட்டும். அவனை (சந்திரரோகியை) இவ்வாறு பிடித்துக்கொண்டு, 'நான் யாரென்று உனக்குத் தெரியுமா? நான் தான் சீமோன் பேதுரு.... அங்கிருந்து வெளியே வா!' என்று கூற வேண்டும்” என்றான். ஆனால் பிசாசோ அங்கேயே இருந்து கொண்டிருந்தான். பிறகு சந்திரரோகியின் தகப்பன் ஏறெடுத்துப்பார்த்து இயேசு நடந்து வருகிறதைக் கண்டான். அவன், “ஆண்டவரே, என் பிள்ளையை உமது சீஷர்களிடத்தில் கொண்டு வந்தேன். அவர்களால் அவனுக்கு எந்த நன்மையும் செய்ய முடியவில்லை” என்றான். இயேசு, “நீ விசுவாசித்தால் என்னால் கூடும்” என்றார். அவர், “ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்க உதவி செய்யும். நான் விசுவாசிக்கிறேன்” என்றான். இயேசு அந்தப்பிள்ளையிடம் வந்த போது அதுவே அவர் செய்ய வேண்டிய காரியமாயிருந்தது. அந்தப் பிசாசு அங்கே பிள்ளையிடம் வந்து கொண்டிருந்த மனிதரிடம் ஏதோ ஒன்றுண்டு என்பதை அறிந்தான். பாருங்கள்? எனவே அப்பொழுது அங்கு எல்லாம் முடிந்தது, பிசாசு பிள்ளையை விட்டு நீங்கிப் போனான். அவை நடந்த பிறகு சீஷர்கள் இயேசுவிடம் தனியே வந்து, “நாங்கள் அதைத் துரத்திவிட ஏன் கூடாமற்போயிற்று? நீர் எங்களுக்களித்திருந்த அதிகாரத்தை எங்களிடமிருந்து திரும்ப எடுத்துக்கொண்டீரோ?” என்று கேட்டனர். அவர், “இல்லை ” என்றார். நான் உங்களுக்கு அவர் எங்கே அதிகாரத்தைக் கொடுத்தார் என்று காண்பிக்க முடியும். ஆனால் எங்கே அவர் அந்த அதிகாரத்தை எடுத்துப் போட்டார் என்பதைக் காண்பிக்க இயலாது. அது உங்களிடத்திலேயே தான் உள்ளது. நீங்கள் அதைப் பயன்படுத்த சற்று அஞ்சினீர்கள். பாருங்கள்? “ஏன் எங்களால் துரத்திவிட முடியாமல் போயிற்று” என்று கேட்டனர். இயேசு இப்பொழுது, “நான் அந்த அதிகாரத்தை திரும்ப எடுத்துக் கொண்டபடியினாலே” என்று கூறவில்லை. “உங்கள் அவிசுவாசத்தினால் தான்” என்றார் அவர். அது தான் காரியம். பாருங்கள்? “அது தான்” ஏனெனில் அதை நீங்கள் விசுவாசிக்கவில்லை“ என்றார். 44இப்பொழுது மிகாயா தான் கண்ட தரிசனத்தை தேவனுடைய வார்த்தையுடன் ஒப்பிட்டுப் பார்த்திராவிடில் அவன் விசுவாசத்தை உடையவனாயிருந்திருக்க முடியாது. நான் ஆபிரகாமையும் அவனுக்கு பின்வரும் சந்ததியுைம் குறித்துப் பேசும் போது அவ்விதமாகவே இருந்தது. எனக்குண்டான தரிசனத்தில் விசுவாசம் கொள்ள முடிந்த காரியம் என்னவெனில் அது தேவனுடைய வார்த்தையாகவே இருந்ததினால் தான். அப்பொழுது நீங்கள் விசுவாசத்தைப் பெறுகிறீர்கள். அது அவ்விதம் தான் என்று நானறிவேன். தேவன் தமது வாக்குத்தத்தை தமது வார்த்தையினால் அளித்திருக்கும் இக்காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர் ஏற்ற நேரத்தில் காரியங்களை நடப்பிக்கிறார். ஆம், ஐயா. அங்கே அதைத் தடுத்து நிறுத்த எதுவுமே இல்லை. அது தொடர்ந்து சென்று கெண்டிருக்கிறது. காலத்தின் முடிவுக்கு சற்றுமுன்பு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நான் விசுவாசிக்கும் காரணம் இதுவே. அன்றொரு நாள் ஒரு ஊழியக்கார சகோதரன் - அந்தப் பையன் இன்றிரவு இங்கு இல்லை. அவன் பாப்டிஸ்ட் சபையைச் சேர்ந்த எல்லா வித பட்டங்களையும் பெற்றவன். மேலும் அவர்கள்... அவனுடைய சபை, அவனையும் அவர் மனைவியையும் மனநோய் நிலையத்திற்கு அனுப்பி விட்டனர். அவன் கடந்த இரவில் இங்கு இருந்தான் (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசிரியர்) நான் அந்த சகோதரனுடன் சரியாக இணங்குகிறேன். மேலும் அது என்ன செய்தது. அது ஒரு போதும் மகத்தான பெரிய வேத பண்டிதர்களிடம் வந்ததில்லை, இயேசு செய்த விதமாகவே மற்றுமுள்ள தீர்க்கதரிசிகள் செய்தவிதமாக அது தாழ்வில் சென்றது. 45எப்பொழுதுமே அது ஏழ்மையான ஜனங்களிடமே செல்கிறது. மேலும் அவர்கள், “நல்லது, என்ன நிகழ்ந்து? அதைப்பற்றி எனக்குத் தெரியாது” என்கின்றனர். நிச்சயமாக. அவர் அவைகளை அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறவர்களுக்காக அதை சற்றே அமர்ந்திருந்து கவனிக்கிறவர்களுக்காக தங்கள் சொந்த எண்ணங்களை அகற்றி தேவனுடைய வார்த்தையுடன் அவைகளை ஒப்பிட்டுப் பார்க்கிறவர்களுக்கு அதை வெளிப்படுத்துகிறார். இப்பொழுது ஆகாப் ஒரு நிமிடம் அல்லது அந்த பிரதான ஆசாரியன் அல்லது அந்தத் தீர்க்கதரிசிகளில் யாராவது உட்கார்ந்து (தேவனுடைய வார்த்தையுடன்) ஒப்பிட்டுப் பார்த்திருந்தால்... சரியானதைப் போல் காணப்படுவதையல்ல. அது இஸ்ரவேலருக்குரியது போல் காணப்பட்டது. ஆனால் அது காணப்பட்டதைப் போல் அல்ல. அது தான் தேவன் அதைக்குறித்து கூறியது. பாருங்கள்? அவர்கள் உட்கார்ந்து அதை (தேவ வார்த்தையுடன்) ஒப்பிட்டுப் பார்த்திருந்தால்.... நாம் நமது வேதப்பள்ளி மாணாக்கரை Ph.D மற்றும் L.L.D. யாகவும் உயர்ந்த சபைக் கட்டிடங்களையும் உலகத்திலேயே பெரிய அருமையானதாக ஆக்க வேண்டியதும், படித்தல், எழுதுதல் மற்றும் கணிதமேதைகளாக உருவாக்கவேண்டும் என்று முயற்சிப்பதாகத் தெரிகிறது. ஆனால் தேவன் கூறியுள்ளது அதுவல்ல. அவர் நீங்கள் போய் ஜனங்களை கல்வியறிவுள்ளவர்களாக்குங்கள் என்று ஒரு போதும் கூறவில்லை. அது முற்றிலும் சரி. என் படிப்பறிவின்மை யினிமித்தம் அறியாமைக்கு ஆதரவாக அதைக் கூறுவதில்லை. ஆனால் பாருங்கள். நான் கூறுவதென்னவென்றால் கல்வியறிவு எல்லாம் சரிதான். ஆனால் அது ஒரு போதும் இரட்சிப்பின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள முடியாது. பாருங்கள்? 46ஓ, பந்து விளையாட்டுகள், சீட்டாட்டங்கள் மற்றும் காரியங்கள் எல்லாம் சரிதான். ஆனால் அவைகள் சபைகளுக்குரியதல்ல. சபையில் நமக்குத் தேவை கிறிஸ்து தான். கிறிஸ்துவைப் போன்ற ரூபமுடையவைகளோ, கிறிஸ்துவின் சித்திரமோ, மரித்துப்போன நிலையிலுள்ள கிறிஸ்துவின் சிலையோ அல்லது கிறிஸ்துவின் சிலையோ அல்ல. நமக்கு உயிர்த்தெழுந்த கிறிஸ்து, நம்மோடு ஜீவித்துத் தம்மை நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக நிரூப்பிக்கும் கிறிஸ்துவே தேவை. அது தான் சபைக்குத் தேவை. அவர்களுக்குத் தேவையானதும் அதுவே. அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளுகிறார்களோ இல்லையோ. அவர்களின் பசிக்கு ஏற்றவாறு அது அளிக்கப்படும். பாருங்கள்? இப்பொழுது அவன் (மிகாயா) தன் தரிசனத்தை தேவனின் வார்த்தையுடன் ஒப்பிட்டுப்பார்த்தவனாய் இரண்டு தேசத்தாருக்கும் முன்பாக நின்று, “நீர் திரும்பி வருவதில்லை. நீர் போர்க்களத்தில் மரித்து போவீர்” என்றான். ஆகாப் என்ன கூறினான் என்று அறிவீர்களா? “இவனை அழைத்துக் கொண்டுபோய் பட்டணத்து அதிகாரியிடம் இவனைச் சிறைச்சாலையில் போடச் சொல்லி இவனுக்கு அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் கொடுக்கும்படி கூறுங்கள். நான் சமாதானத்துடன் திரும்பி வரும்போது, நான் திரும்ப வரும்போது இவனைப் பார்த்துக் கொள்வேன்” என்றான். 47மிகாயா என்ன கூறினான் என்று உங்களுக்குத் தெரியுமா? அவன் சுற்றுமுற்றும் பார்த்து அவனை நோக்கி, “நீர் திரும்பி வருகிறதுண்டானால் கர்த்தர் என்னோடு பேசினதில்லை” என்றான். ஓ, அவன் தான் எங்கே நிற்கிறான் என்பதை அறிந்திருந்தான். அந்த விதமாகத் தான் ஒவ்வொருவரும்..... அதைத்தான் அங்கு எளிய ஸ்திரீ தன் சிறிய குழந்தைகளுக்காகச் ஜெபித்தால் என்று அவ்வளவு நிச்சயமுடைய வளாயிருந்தாள். அவ்விதமாகத்தான் அந்தப் பெரிய கட்டியை உடையவளாய் பின்னால் படுத்துக்கொண்டிருந்த ஸ்திரீயும் செய்தாள். எதைச் செய்ய வேண்டுமென்றாலும் அவளுக்கு அது ஒரு பொருட்டல்ல... குழியைத் தோண்டியோ கூரையின் வழியாகவோ அல்லது எப்படியாயினும் அவள் வரக்கூடிய வளாயிருந்தாள். அது தான் அவளுடைய விருப்பம். அதுவே அவள் விசுவாசமாயிருந்தது. அவளுடைய விசுவாசமானது தேவனின் வார்த்தையுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு இயேசு கிறிஸ்து இன்றும் ஜீவிக்கிறார் என்பதை அறிந்தவளாயிருந்தாள். அவள் விசுவாச முடையவளாயிருந்தபடியால் அது சம்பவித்தது. இப்பொழுது நாம், மிகாயா கூறியது அல்லது அவன் கூறிய ஒவ்வொன்றும் அவன் கூறியனவாறே சம்பவித்தது. மேலும் ஒவ்வொரு தீர்க்கதரிசியும் காலங்களிடனுடாக (இப்பொழுது நான் முடிக்கப் போகிறேன்) தேவனுடனிருந்து எதையும் எப்போதும் செய்வதற்கு தேவனின் வார்த்தையையே அஸ்திபாரமாக கொண்டிருந்தனர். இப்பொழுது அவர்கள் வார்த்தையை விட்டு அகலவில்லை. சூழ்நிலை எவ்விதமாகத் தோன்றினாலும் அது பொருட்டல்ல, அவர்கள் வார்த்தையை விட்டு அகலவில்லை. 48தேவன் நோவாவிடம் மழை பெய்யப் போகிறது என்று கூறினார். நோவா ஒரு போதும் அதை விட்டு அகலவில்லை. அவன் அதனுடன் சரியாக நிலைத்திருந்தான். அது ஒரு பொருட்டல்ல... அவர்கள் கொண்டிருந்த விஞ்ஞான அறிவு நாம் இப்பொழுது கொண்டிருப்பதைக் காட்டிலும் மகத்தானதாக இருந்திருக்கலாம். இப்பொழுது இந்த உலகத்தின் விஞ்ஞான வளர்ச்சியைக் கொண்டு நாம் கட்ட முடியாத பெரிய கட்டிடங்களையும் கட்டுதல் மற்றும் காரியங்களையும் அவர்களால் செய்ய முடிந்தது. அவர்கள் கூர்நுனிக் கோபுரங்களையும் ஸ்பிங்ங்ஸ்க ளையும் மற்றவைகளையும் கட்டினர். நாம் அவைகளைப் போல் உருவாக்க முடியாதிருக்கிறது. ஆனால் அவர்கள், “மழை எங்கிருந்து வரும்?” என்று கேட்டனர். நோவா அவர்களுக்கு அதைக்குறித்து கூற முடியவில்லை? அவர்களுடைய கேள்விகளுக்கு அவனால் பதில் கூறமுடியவில்லை. ஆனால் தேவன் அவனுடன் பேசினார் என்பதை அவன் அறிந்திருந்தான். எனவே அவன் சரியாக வார்த்தையில் நிலைத்திருந்தான். அவன், “தேவன் அவ்வாறு கூறியுள்ளார்” என்றான். பாருங்கள்? ஆபிரஹாம் தான் நூறு வயதுள்ளவனும் சாராள் தொண்ணூறு வயதுள்ளவளுமாயிருக்கையில் எப்படி அவள் மூலம் ஒரு குழந்தையைப் பெறப்போகின்றான் என்பதைக் கூறமுடியவில்லை. “நீ எப்படி பெறப்போகிறாய்? அதை எனக்கு நிரூபி. அவள் வயதானவள். அவள் கர்ப்பம் உலர்ந்து போய் விட்டது. உங்களுடைய தாம்பத்திய உறவும் இருபது வருடங்களாக இல்லையே. இருப்பினும் நாங்கள் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்வோம் என்று சொல்கிறாயே. அதை எப்படி செய்யப்போகிறாய்?” “அது எனக்குத் தெரியாது” “நல்லது, நீ அதைப் பெற்றுக் கொள்வாய் என்று எப்படி அறிவாய்?” தேவன் அவ்வாறு கூறினார். அதுவே அதன் தீர்வாக உள்ளது. சரியாக வார்த்தையுடன் நிலைத்திருங்கள். உண்மையான தீர்க்கதரிசிகள் எல்லோரும் வார்த்தையுடன் நிலைத்திருந்தனர். சில சமயங்களில் அது அவர்களைத் தொல்லைக்குள்ளாக்கியது. அது எல்லா நேரங்களிலும் அது அதையே செய்கிறது. ஆனால் அது எப்பொழுதுமே சத்தியமாக இருக்கிறது. எபிரேயப் பிள்ளைகள், “எங்கள் தேவன் எங்களை அக்கினிச் சூளைக்குத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். விடுவிக்காமற் போனாலும் நாங்கள் நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்வதில்லை. அது ஒரு உறுதியான காரியம். நாங்கள் பின்மாற்றம் அடைவதைக் காட்டிலும் அக்கினியில் வெந்து போவோம்” என்றனர். எனவே அவர்கள் இரவில் சிலமணி நேரங்கள் ஜெபத்தில் இருக்க வேண்டியதாயிருந்தது. அடுத்த நாள் காலையில் அவர்கள் எரிகிற அக்கினிச்சூளையில் போடப்பட்டனர். ஆனால் அவர்களோ தேவனுடைய குமாரனைப் போன்ற ஒருவருடன் உலாவிக்கொண்டு உரையாடிக் கொண்டிருந்தனர். பாருங்கள்? அவர்கள் தேவனின் வார்த்தையுடன் நிலைத்திருந்தனர். 49தானியேல், “நீங்கள் எத்தனை பிரகடனங்கள் செய்தாலும் எனக்குக் கவலை இல்லை. பலகணிக்கருகில் சென்று கிழக்கு முகமாய் அவைகளைத் திறந்து என் தேவனிடம் ஜெபிக்கும் பழக்கம் எனக்கிருக்கிறது'' என்றான். அது அவனை ஒரு இரவு முழுவதும் சிங்கத்தின் கெபியில் இருக்கும்படிச் செய்தது. ஆனால் அவன் வார்த்தையில் நிலைத்திருந்தான். அது சரி. அவன் (சிங்க கெபியினின்று - மொழிபெயர்ப்பாளர்) வெளியே வந்தான். தேவன் எப்பொழுதும் தம் வார்த்தையைக் காத்துக் கொள்கிறார். ஆம். தாவீது அங்கே சவுலுக்கு முன்பாக வந்திருந்த வேளையில் அந்தப் பெரிய கோலியாத் அங்கு வந்து, “அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன. அப்படிப்பட்ட ஒன்று கிடையாது” என்றான். பாருங்கள்? இப்பொழுது, இல்லை அது 1961-ம் வருடப்பதிப்பு ஆகும். நான் உங்களிடம் மன்னிப்பைக் கோருகிறேன். நான் மீண்டும் வேத பகுதிக்கு திரும்புகிறேன்... அவன், “உங்களில் யாராகிலும் ஒருவன் வந்து என்னுடன் யுத்தம் செய்யட்டும்” என்றான். பாருங்கள். அவன் அவ்விதம் கூறினான்.... தன் இராணுவத்திலுள்ளவர்கள் எல்லோருடைய தோள்களுக்கு மேலாக உயரமுள்ளவனாகிய சவுல், “நல்லது, நான் கூறுகிறேன். அது ஒரு மோசமான காரியம். சிறுபையனே, அந்த மனிதன் வந்து... அவனுடைய எடை என்னவென்று பார். அவன் பதினான்கு அங்குல நீளமான விரல்களை உடையவனாயிருக்கிறான்” என்றான். நல்லது வேதம் அவ்விதமாகத் தான் கூறுகிறது. அவன் நெய்கிறவர்களின் படைமரத்தைப் போன்ற ஈட்டியை உடையவனாயிருந்தான். அது அந்த அறையின் நீளத்திலிருக்கும். “அப்படிப்பட்ட ஒருவனுடன் போய் யுத்தம் பண்ண உங்களில் யாரால் கூடும்?” என்று கேட்டான். 50இங்கே ஒரு சிறுவன் வருகிறான்... இராணுவத்தில் எல்லாரும் பயந்து பின் வாங்கினர். தேவ பயமுள்ளவர்களாயிருக்க வேண்டிய இஸ்ரவேலர் அவனுக்கு பயந்து பின்வாங்கினர். அவர்கள், “ஓ, என்னே. ஓ, நாம் அதைச் செய்ய முடியாது. அவனை ஒருவராலும் தொடமுடியாது” என்றனர். அவன், “நான் செய்யப் போவதை உங்களுக்கு கூறுகிறேன். அங்கே அதிகமான இரத்தம் சிந்தப் படவேண்டிய அவசியமில்லை. உங்களில் ஒருவர் மட்டும் வந்து என்னோடு யுத்தம் பண்ணட்டும். என்னைக் கொன்று விட்டால் எங்கள் ராணுவம் உங்களைச் சேவிக்கும்” என்றான். பாருங்கள். சாத்தான் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியும் என்று நினைக்கும்போது, அவன் அவ்விதமாகத் தான் அந்தக் காரியத்தை ஊதி வெடிக்கச் செய்யப் பார்க்கிறான். பாருங்கள்? எனவே ஒரு நாள் அதை அநேகத் தடவைகள் கூறினான். அங்கே தோள் தொங்கிய ஆட்டுத் தோலைப் போர்த்துக் கொண்டும், ஒரு கவணைத் தன் கையில் உடையவனாகவும் ஒரு சிறுவன் அங்கே இருந்தான். கோலியாத் வந்து, “அங்கே இருக்கிற கிறிஸ்தவர்கள் என்று உரிமைகோருகிற (உங்களுக்குத் தெரியும், இன்னார் இன்னார், இன்னார் இன்னார்) அப்படிபட்டவர்களே வாருங்கள். இது என்னவென்று பார்ப்போமா?” என்றான். தாவீது சவுலிடம், “அந்த விருத்தசேதனமில்லாத பெலிஸ்தியன் வந்து நின்று ஜீவனுள்ள தேவனுடைய சேனையை நிந்திப்பதற்கு விட்டு விடு என்று என்னிடம் கூறப்போகிறீரா?” என்று கேட்டான். தாவீதின் சகோதரன் அவனிடம், “இப்பொழுது நீ துணிகரம் கொண்டிருக்கிறாய். நீ வீட்டிற்கு செல்கையில் நான் அதை நம் தகப்பனாரிடம் கூறப்போகிறேன். நான் அதைத்தான் செய்ய போகிறேன். நீ உன்னைப் பெரியவனாகக் காட்டிக் கொள்கிறாய்” என்றான். 51அவன், “நான் என்னைப் பெரியவனாகக் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அங்கே ஒரு கட்டாயத் தேவை இருக்கிறது. அங்கே ஒரு தேவை உண்டு. அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனையை நிந்தித்துக் கொண்டிருக்கிறான்” என்றான். எனவே அவர்கள் அவனை சவுலிடம் அழைத்துச் சென்றனர். சவுல் அவனிடம், “மகனே, நான் உன் தைரியத்தை மெச்சிக் கொள்கிறேன். ஆனால் நீ ஒரு சிறு இளைஞன். அவனோ தன் சிறு வயது முதல் யுத்த வீரன். உனக்கு பட்டயத்தையோ மற்றவைகளையோ உபயோகிப்பது எப்படி என்று தெரியாது” என்று கூறினான். அவன், “ஆனால் பாரும், எனக்கு சில அனுபவங்கள் உண்டு. ஒரு தடவை நான் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு சிங்கம் வந்து என் தகப்பனின் ஆடுகளில் ஒன்றைப் பிடித்துக் கொண்டது. நான் அதை கொன்று போட்டேன். பிறகு ஒரு கரடி வந்து ஆடுகளில் ஒன்றைப் பிடித்தது. நான் அதையும் கொன்று போட்டேன். அப்படியிருக்க விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தியனை தேவன் என் கையில் ஒப்புக் கொடுப்பது எவ்வளவு நிச்சயம்? ஒரு சமயம் ஒரு சிங்கம் என் தகப்பனின் ஆடுகளில் ஒன்றைப் பிடித்துக் கொண்டு ஓடியது. அது அப்படிச் செய்தபோது நான் அதைப் பின் தொடர்ந்து போய் சிங்கத்தைக் கொன்று ஆட்டைத் திரும்பக் கொண்டு வந்தேன்” என்றான். நான் அந்தக் தைரியத்தை விரும்புகிறேன். நீங்களும் தானே? என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அங்கே உங்களில் அநேகர் அந்த ஆடுகளைப் போலிருக்கிறீர்கள்? இப்பொழுது அங்கே சிங்கம் இல்லை. ஆனால் ஒரு புற்று நோயோ, கட்டியோ அல்லது சில பிசாசுகளோ உங்களைத் திருடிச் சென்றுள்ளது... நாம் இன்றிரவில் பிதாவின் ஆடுகளைத் திரும்பக் கொண்டு வரவே (அது சரி) வந்துள்ளோம். நீங்கள் உங்களை அர்ப்பணிக்க ஆயத்தமாயிருங்கள். தேவனின் கிறிஸ்து இங்கிருக்கிறார். அவர் உங்கள் சுகத்தை சரியாக உங்களுக்கு திரும்பிக் கொண்டு வருவார். கடந்த இரவில் எங்கு நோக்கினும் சக்கர நாற்காலிகளில் வியாதியும், பாடுகளும் உடையவர்களாயிருந்ததைக் கண்டீர்களா? பாருங்கள். உபத்திரவம் உங்களைத் தாக்குகிறது. ஆனால் உங்களை விடுவிக்க பிதாவாகிய பரிசுத்த ஆவி இங்கிருக்கிறார். 52சவுல், “ஓ, இப்பொழுது நீ அங்கு சென்று அதைச் செய்ய நீ சில இறையியல் பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும் என்று அறிந்துக் கொள். எனவே என்னிடமிருந்து அதற்கான கல்வியுதவியைப் பெற்றுக் கொள்வது நல்லது” என்றான். எனவே அவன் தன் ஆயுதங்களை அவனுக்குத் தரிப்பித்தான். சிறிய தாவீது அதனுடன் தரையில் நடந்து பார்த்தான். அவன் சவுலின் இறையியல் உடைகள் தேவ மனிதனுக்கு பொருந்தாது என்று கண்டு கொண்டான். எனவே “ஸ்தாபனங்களின் உபதேச புத்தகங்கள் எனக்குத் தேவையில்லை” என்று தாவீது கூறினான். எனவே அவன், “இதை என்னிடமிருந்து எடுத்துப் போடுங்கள். அது எனக்கு சரியென்று நிரூபணமாகவில்லை. அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் இதைக் குறித்து அறிந்திருக்கிறேன். எனக்கு எதில் நம்பிக்கை உண்டோ அதனுடன் செல்ல என்னை அனுமதியுங்கள்” என்றான். அவன் அந்த சிறிய கவணைக் கையிலெடுத்துக் கொண்டு அங்கு சென்றான். தேவன் அவன் எறிந்த கல்லை இயக்கி அந்த இராட்சதனின் மேல் படச் செய்து அவனைக் கொன்று போட்டார். ஏன்? அவன் தேவனுடன் நிலைத்திருந்தான். அவனுக்குண்டான வெளிப்பாட்டில் அவன் நிலைத்திருந்தான். அது சரி. ஒவ்வொரு உண்மையானவனும்... 53பேதுருவும் யோவானும் போய் வியாதியஸ்தர்களுக்காக ஜெபியுங்கள் என்ற கட்டளைப் பெற்றுக் கொண்டு அலங்கார வாசல் என்னப்பட்ட வாசலைக் கடந்து போன போது தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய் பிறந்த ஒருவன் அங்கே வைக்கப்பட்டிருந்தான். அவன், “வெள்ளியும், பொன்னும் என்னிடத்தில் இல்லை; என்னிடத்தில் உள்ளதை உனக்குத் தருகிறேன்” என்றான். “நீர் பெற்றிருப்பது என்ன?” என்று கேட்டான். “நான் இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தைப் பெற்றிருக்கிறேன். நீயும் அதையே பெற்றிருக்கிறாயா?” “ஆம், ஐயா” “அப்படியானால் நீ எழுந்து காலூன்றி நில்.” ஆமென். அவன் இவ்விதமாய் பேசினான். அப்பொழுது அவர்கள் அவனைப் பிடித்துத் தூக்கி விட்டனர். அவன் குதிக்தெழுந்து நடந்தான். நடந்து குதித்தான். அப்படியே அவனைப் பற்றிக் கொண்டான். அவன் உடனடியாக சுகத்தைப் பெற்று நடந்து கொண்டு போனான். அதனுடன் சேர்ந்து கொண்டு அவன் (பேதுரு) தனக்களிக்கப்பட்ட அவருடைய கட்டளையில் நிலைத்திருந்தான். அவன் வார்த்தையில் நிலைத்திருந்தான். எல்லோரிலும் பெரியவராயிருக்கும் இயேசு இப்பூமியில் இருந்தபோது... அங்கே அவரைப்போல ஒருவரும் இருந்ததில்லை; அவரைப் போல ஒருவரும் இருக்கப் போவதும் இல்லை. ஆனால் இயேசு இங்கே பூமியின் மீதிருந்த போது அவர் வார்த்தையில் நிலைநின்றார். அவர் தேவனின் வார்த்தையினால் பிசாசைத் தோற்கடித்தார். பிசாசு அவரைச் சோதிக்கும்படியாக, “ஏன் இவ்விதம் எழுதியிருக்கிறதே” என்றான். அவர் (இயேசு), “ஆம், இப்படியும் எழுதியிருக்கிறதே” என்றார். அவன், “நல்லது, நான் ஒரு வேத பண்டிதன் என்று அறிவீரா?” என்று கேட்டான். அவர், “ஆம், நானும் கூட” என்றார். அவன், “உம்முடைய பாதங்கள் கல்லில் இடறாதபடி உம்மைத் தாங்க உம்மைக்குறித்து தூதர்களுக்கு கட்டளையிடுவார் என்று எழுதியிருக்கிறதே” என்றான். “ஆம்” என்றார் அவர். “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே. அப்பாலே போ சாத்தானே” என்றார். அவர் இவ்விதமாக தொடர்ந்து சென்றார். பாருங்கள். இது தான் தேவனின் வார்த்தை... எல்லா தீர்க்கதரிசிகளும், எல்லா கிறிஸ்தவர்களும் எல்லா உண்மையான விசுவாசிகளும் அந்த வார்த்தையுடன் நிலைத் திருக்கின்றனர். யார் என்ன கூறின போதிலும் அது ஒரு பொருட்டல்ல. நீங்கள் சரியாக தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருங்கள் - அவர்கள் அற்புதங்களின் நாட்கள் கடந்து போய்விட்டது என்று கூறுகிறார்கள். நீங்கள் அதை நம்ப வேண்டாம். ஏனெனில் வேதம், “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்” என்று கூறியுள்ளது. 54“ஏன், நாங்கள் அதை விசுவாசிக்கிறோமே” என்று நீங்கள் கூறுகிறீர்கள். “நல்லது, அவர் மாறாதவராயிருப்பாரானால் அவர் அதே காரியங்களைச் செய்வார். அது எப்பொழுது... தேவன் இறங்கி வந்து அவ்வாறு கூறாவிடில் அது எனக்கு எந்த நன்மையைச் செய்யக்கூடும்? இப்போது, இது தேவனுடைய வார்த்தையில்லையென்று நீங்கள் கூற முடியாது - எனவே அது தேவனின் வார்த்தையாயிருக்கிறது. மற்றவர்களிடத்தில் நிரூபிக்கப்பட்ட அத்தாட்சிகள் இங்குள்ளது. அதை இன்றிரவு உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? முழு இருதயத்தோடும் அதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் சற்று நேரம் நாம் தலைகளை வணங்குவோம். எங்கள் பரலோகப் பிதாவே, இப்போது தான் நான் வேதத்தின் பக்கங்களைத் திரும்பினேன். அது எழுதப்பட்ட வார்த்தை. இப்பொழுது அந்த வார்த்தை மாம்சமாகி எங்களுக்குள் வாசம் பண்ண வேண்டும்... அவர் தாமே ஆள் தத்துவமுள்ளவராய் எங்களுக்குள் வந்து, தமது நன்மைகளையும், இரக்கத்தையும் காண்பிப்பாராக. அவர் தமது உயிர்த்தெழுதலின் வல்லமையை காண்பிப்பாராக. அவர் தமது வல்லமையைக் காண்பிப்பாராக. ஏனெனில் அவர் இன்றும் மாறாதவராயிருக்கிறார். இப்பொழுது நாங்கள் நிந்திக்கப்பட்ட, பரிகசிக்கப்பட்ட ஒரு சிறிய ஜனக் கூட்டமாயிருக்கிறோம். அது எப்பொழுதும் அந்த விதமாகத்தான் இருந்து வருகிறது. மேலும் நாங்கள் இன்றிரவு பவுலுடன் சேர்ந்துக் கொண்டு “அவர்கள் மதபேதம் என்று சொல்லுகிறபடி நான் என் முற்பிதாக்களின் தேவனை ஆராதித்து வருகிறேன்” என்று கூற விரும்புகிறோம். 55இப்பொழுதும் கர்த்தாவே, எல்லாரிடத்திலும் அவிசுவாசம் காணப்படும் இந்தப் பெரிய நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் அப்படிப்பட்டவைகளை அதிகமாகக் கொண்டிருக்கிறோம். இந்த லவோதிக்கேயா சபையின் காலத்தில் உலகமானது தன்னை அவ்வாறு சீராட்டிக் கொண்டுள்ளது. உமது சொந்த சபையும் கூட உம்மிடத்தில் இடறலடைந்ததாய் பின்மாறிப்போய் உலகத்தின் காரியங்களால் இழுக்கப்பட்டுள்ளது. நாற்பது வருடங்களுக்கு முன்பே இயேசு வந்திருப்பாரானால் அது மிக நன்றாக இருந்திருக்கும். ஏனெனில் அது (சபை) இப்போதிருப்பதைக் காட்டிலும் நன்றாக இருந்தது. ஏனெனில் இப்பொழுது அதன் எல்லாவித நிலைகளாலும், பாரம்பரியங்களாலும் அது தகர்ந்து போயிருக்கிறது. வேதகலாசாலைகளிலிருந்து உருவாக்கப்பட்டு வெளிவரும் இளம் ஊழியர்கள் தங்கள் சொந்த எண்ணங்களையும் காரியங்களையும் உடையவர்களாய் வேதத்துக்குத் தங்கள் கவனத்தைச் செலுத்தாமல் பாரம்பரியங்கள் போன்றவைகளை எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் எப்போதும் செய்து வந்தது போலவே (gaummed) செய்து வருகிறார்கள். தேவனே, நீர் தீர்க்கதரிசிகளின் நாட்களில் செய்தது போலவே மாறாதவராக இருந்து இன்றும் அதைச் செய்கிறீர். இன்றும் நீர் அதே தேவனாயிருக்கிறீர். பிதாவே, ஜனங்கள் உம்மை அறிந்து கொள்ளும்படி நீர் தாமே உம்மை வெளிப்படுத்த வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இப்பொழுது பிரசங்கித்தல்- உலகமானது மரிப்பதைக் குறித்துப் பிரசங்கிக்கிறது அல்லது பேசுகிறது. எதை விசுவாசிப்பதென்று ஏழை ஜனங்கள் அறியாதிருக்கின்றனர். அவர்கள் இங்கும் அங்கும் ஓடுகின்றனர். கடைசி நாட்களில் அப்பத்துக்கான பஞ்சம் மாத்திரமல்ல, உண்மையான வேதவசனம் கேட்கக் கூடாத பஞ்சம் ஏற்படும் என்று நீர் கூறின விதமாகவே அப்படிப்பட்ட நேரம் இப்பொழுது நெருங்கிக் கொண்டிருக்குமானால் அவர்கள் கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் தேவனின் உண்மையான வார்த்தையைத் தேடி அலைவார்கள் என்று நீர் கூறியிருக்கிறீரே... இப்போதும் பிதாவே, அது அவ்விதமாக வேயிருக்கிறது. ஏனெனில் நாற்பதாண்டுகளுக்கு முன்பு நாங்கள் கொண்டிருந்த அந்த நல்ல ஆவிக்குரிய கூட்டங்களைப் போன்ற ஒரு கூட்டத்திற்குச் செல்ல முப்பது மைல் தூரங்கள் கற்கள் நிறைந்த பாதைகளில் வெறுங்காலில் நடக்க வேண்டியுள்ளது என்று ஜனங்கள் கூறுவதைக் கேட்கிறோம். ஆனால், ஓ தேவனே, அவர்கள் எங்கே அதை இப்பொழுது கண்டு கொள்ள முடியும்? அவர்கள் ஒரு கூட்ட மனிதர்களால் உண்டாக்கப்பட்ட கோட்பாடுகளில் சிக்கியிருக்கிறார்களே! 56ஆனால் கர்த்தாவே, அது அவ்விதமாகத்தான் இருக்கும் என்று வாக்குப்பண்ணியிருக்கிறீர். லவேதிக்கேயா சபையின் காலத்தில் நீர் உம்முடைய சபையிலிருந்து தள்ளிவிடப்பட்டதைக் காண்கிறோம். சபைக்காலத்தில் மட்டுமே நீர் உம்முடைய சொந்த சபையை விட்டு நீர் அவர்களால் வெளியே தள்ளப்பட்டு, கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறீர். “ஒருவன் தாகமாயிருந்தால் நான் கதவைத் திறந்து உள்ளே வருவேன்.” பிதாவே, இங்கு இன்றிரவு அநேக தாகமுள்ள ஜனங்கள் இருக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன். “நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள்.” இப்பொழுது, நாங்கள் உம்முடைய சபையாய் எங்களை உம்மிடம் சமர்ப்பிக்கிறோம். எங்களை உம்முடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு எங்களோடு இடைபடும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென். பில்லி எங்கேயிருக்கிறான்? இன்று அங்கே ஜெப அட்டை கொடுக்கப்பட்டு விட்டதா? அதை மறந்து விடுங்கள். நல்லது, நாம் அதை இன்று உபயோகிக்கப்போவதில்லை. தேவனே உங்கள் ஜெப அட்டையாக இருக்கட்டும். இதைச் செய்யவேண்டும் என்று நான் உணர்கிறேன். நாம் முன்பாக.... அங்கே அப்போஸ்தலர் நடபடிகளில் காண்கிறபடி (அப்:19:11) ஜெபிப்பதற்காக துணிகள் வைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது, எத்தனை பேரிடத்தில் ஜெப அட்டைகள் இல்லை. வியாதியாயிருந்து ஜெப அட்டைகளை வைத்திராதவர்கள் கரங்களை உயர்த்துங்கள். நல்லது, எத்தனை பேர் ஜெப அட்டைகளை வைத்திருக்கிறீர்கள்? கரங்களை உயர்த்துங்கள். ஓ என்னே, ஒன்று இரண்டு அங்கே முப்பது பேருக்கு மேல் ஜெப அட்டைகளை வைத்திருக்கவில்லை என்று நான் யூகிக்கிறேன். முன்னூறு பேருக்கு மேல் வியாதியாயுள்ளனர். சரி. பெரும்பாலானவர்கள் ஜெப அட்டையை வைத்திராதவர் களாயுள்ளனர். மற்றொரு இரவில் அவர்களுக்கு ஜெப அட்டைகளைக் கொடுப்போம். 57நாம் இதைக் கூறுவோம். தேவன் தேவனாக இருப்பாரானால்... அந்த தெய்வ நிபந்தனையான காரியத்தை கூறியதற்காக என்னை மன்னியுங்கள். தேவன் தேவனாகவே இருக்கின்றார். அவர் தேவனாக இருப்பாரென்றால் அவருடைய வார்த்தை மாறாததாகவே இருக்கிறது. அவருடைய தழும்புகளால் நீங்கள் குணமானீர்கள் என்று வேதம் கூறுகிறது. அந்த இயேசு இன்றிரவு இங்கு வருவாரானால்.... அவர் வருவார், அப்போது அது காலத்தின் முடிவாக இருக்குமென்று நாம் அறிவோம். ஆனால் அவர் இங்கு இன்றிரவு தோன்றி இந்தப் பீடத்தின் மேல் நான் நிற்பதைக் காண்கிறீர்களே அதுபோல் நின்றுகெண்டிருந்தால் நீங்கள் அவரிடம் வந்து, “கர்த்தாவே என்னை சுகமாக்குவீரா?” என்று கேட்பீர்கள். அவர் உங்களை சுகமாக்க முடியாது. அது அவரே தம்முடைய சொந்த சட்டத்தை மீறியதாக இருக்கும். பாருங்கள்? “நான் ஏற்கனவே சுகமாக்கிவிட்டேன்” என்று கூறுவார். அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம். அவர் உங்கள் அவிசுவாசத்தினிமித்தம் உங்களைக் கடிந்துகொள்ளக்கூடும். அவர்.... அவருடைய தழும்புகளால் நீங்கள் குணமானீர்கள். இப்பொழுது, ஆபிரகாமின் வித்தைக் குறித்தும் அது எவ்வாறு என்றும் நான் கடந்த ஞாயிறு பிற்பகல் பிரசங்கித்ததை இங்குள்ளவர்களில் எத்தனைப்பேர் கேட்டீர்கள்? நீங்கள் அதையும் அதைப் போன்றவைகளையும் கேட்டிருக்கிறீர்களா? 58இப்பொழுது, இயேசு இப்பூமியின் மேலிருந்தபோது அவர் இப்பூமியிலிருந்த போது நடந்தவற்றைக் காண்போம். அவர் ஜெபவரிசையைக் கொண்டிருந்திருப்பார் என்று யூகிக்கிறேன். நிச்சயமாக. ஆனால் அநேக வேளைகளில் அவர் நின்று கூட்டத்தினைப்பார்த்து அவர்களுடைய காரியங்களைக் குறித்து கூறினார். அது சரி தானே ? வேதவாக்கியங்களைப் படிப்பதன் மூலம் அது அவருடைய மேசியாவின் அடையாளம் என்று எத்தனைப்பேர் அறிந்திருக்கிறீர்கள்? வேதத்தை வாசிக்கிறவர்களில் எத்தனைபேர் அதை அறிந்திருக்கிறீர்கள். இங்குள்ள வேதம் வாசிப்போர் எல்லோரும் அதை அறிவார்கள் என்று நினைக்கிறீர்களா? மூன்றில் ஒரு பங்கு ஜனங்கள் மட்டுமே கரங்களை உயர்த்தியுள்ளனர். இன்றிரவு எத்தனை பெந்தெகொஸ்தே ஜனங்கள் இங்கிருக்கிறீர்கள்? கரங்களை உயர்த்துங்கள்? உங்களுக்கும் உங்கள் போதகராயிருக்கிற ஒருவருக்கும் மேசியாவின் அடையாளம் எதுவென்று அறியாதிருப்பது அவமானமா யில்லையா? மேசியா என்னவாயிருப்பார் என்று மோசே கூறியுள்ளார்? “உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போன்ற ஒரு தீர்க்கதரிசியை (ஒரு போதகரையா?) எழுப்புவார்” என்றான். அவர்கள் அதைக் கண்டபோது.... மேலும் தேவன், “உங்களுக்குள் ஒரு தீர்க்கதரிசி இருந்து அவன் ஒரு காரியத்தைக் கூறி தீர்க்கதரிசியின் அடையாளத்தைச் செய்து அது நிறைவேறினால் பின்பு அவனை விசுவாசியுங்கள். ஏனெனில் நான்..... நான்.... இப்பொழுது அது என்னுடைய வார்த்தை.... அது நிறைவேறாவிட்டால் அவனை விசுவாசிக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார். 59இப்பொழுது, இயேசு பூமியிலிருந்த போது கூறப்பட்டிருந்தபடியே தம்மை மேசியாவென்று நிரூபித்தார்.... பெந்தெகொஸ்தேயினரான உங்களுக்கு சிலவற்றைக் காண்பிக்க விரும்புகிறேன். சமாரிய ஸ்திரீயைப் பாருங்கள். இப்பொழுது நீங்கள் அநேக நாட்களாய் பெந்தெகோஸ்தேயினராயிருந்தும் இயேசுவைக் கண்டபோது அந்த இழிவான சமாரிய ஸ்திரீ உங்களைக் காட்டிலும் வேதத்தை அறிந்தவளாய் இருந்தாள். ஏனெனில் இயேசு அவளுடனே பேசி, “ஸ்திரீயே, போய் உன் புருஷனை அழைத்து வா” என்று கூறியபோது அவள், “எனக்குப் புருஷனில்லை ” என்றாள். அவர், “நீ சொன்னது சரிதான். எப்படியெனில் ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள். இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல. இதை உள்ளபடி சொன்னாய்” என்றார். அவள், “ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருவார் என்று அறிவேன். அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார்” என்றாள். அவள் அதுதான் மேசியாவின் அடையாளம் என்று அறிந்திருந்தாள். பாருங்கள். அவர், “உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்றார். 60அவள் ஊருக்குள் ஓடி ஜனங்களை நோக்கி, “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள். அவர் மேசியா தானோ?” என்றாள். அந்த ஸ்திரீயின் வார்த்தையினிமித்தம் அந்த ஊரார் முழுவதும் இயேசுவை விசுவாசித்தனர் என்று வேதம் கூறுகிறது. இப்பொழுது அது உண்மையென்று எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? பாருங்கள். நல்லது, அது மேசியாவின் நேற்றைய அடையாள மாயிருந்திருக்குமேயானால் பின்பு... அவர் அதைப் புறஜாதிகளுக்கு முன்பாக அல்லது புறஜாதிகளுக்கு அதைச் செய்தார் என்று வேதத்தில் நீங்கள் காணமுடியாது. ஏனெனில் சுவிசேஷம் அதுவரை புறஜாதிகளின் யுகத்தின் முடிவிலே, புறஜாதிகள் மேசியாவுக்காக எதிர்பார்த்திருக்கும் காலத்தில் அதைச் செய்வதாக அவர் வாக்களித்துள்ளார்... நாம் அவ்வாறிருக்கிறோமா? நல்லது, பின்பு, அவர் அப்போது செய்தது போல் செய்யாமல் வேறுவிதமாக தோன்றுவாரானால் அவர் அதே மேசியா அல்ல. எனவே அவர் அதேவிதமாகவே புறஜாதிகளிடத்தில் வரவேண்டியவராயிருக்கிறார். 61இப்பொழுது நீங்கள் சுற்றுமுற்றும் நகரவேண்டாம். அமைதியாயிருங்கள். பயபக்தியாயிருங்கள். தேவன் இன்றும் அதே தேவனாக இருக்கிறார் என்று அங்குள்ள எத்தனைபேர் விசுவாசிக்கிறீர்கள்? அது சரி. நீங்கள் ஜெபியுங்கள். விசுவாசத்தைக் கொண்டிருங்கள். சந்தேகப்படாமல் ஜெபியுங்கள். மேலும், இப்பொழுது, என் நியாயாதிபதியாகிய சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு முன்பாக அவருடைய இரத்தத்தினால் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டுள்ள கூட்டத்தினரிடம், இந்தக் கட்டிடத்தில் உள்ளவர்களில் நிஜமாகவே நான் அறிந்துள்ளவர்கள் யாரேனும் உண்டா என்று கேட்கிறேன். இப்பொழுது நான் தவறாக இல்லையெனில் இங்கு வலதுபக்கமாக கடைசியில் உட்கார்ந்து கொண்டிருக்கிற இந்த மனிதரையும் அவர் மனைவியையும் நான் அறிந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஐயா, அது சரியா? இது இங்கு எப்போதும் மலர்களைக்கொண்டு வரும் விலையேறப்பெற்ற சகோதரன் என்று நினைக்கிறேன். மேலும் கடைசியில் அமர்ந்திருக்கும் அந்த ஸ்திரீ, அவர்களை நான் அறிவேன் என்று நினைக்கிறேன். சரியாக அவர்களுக்குப் பின்னாக எனதருமையான இரண்டு நல்ல நண்பர்கள் ஓஹியோவிலிருந்து வந்துள்ள சகோதரர் மற்றும் சகோதரி டாக். அது சரி தானே? அது நீங்கள் தானே சகோதரி டாக் சகோதரன் டாக்? 62வழியின் கீழேயும் நான் ஒருவரையும் காணவில்லை . மேலும் இங்கு உள்ளே... எனக்கு நேரே முன்பாக உட்கார்ந்திருப்பவர் சகோதரன் ஸ்ட்ரைக்கர் தானா? மஞ்சள் நிற சட்டையை அணிந்திருப்பவர்? அது நீங்களா? இல்லை. மேலும் சகோதரன் ஸ்ட்ரைக்கர் இங்கு இருக்கிறார் என்று அறிவேன். ஏனெனில் இன்று அவரைப்பார்த்தேன். ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை . ஆம், அதோ, அவர் பின்பக்கத்தில், மூலையில் இருக்கிறார். நல்லது, சற்றுநோக்கி இவ்வளவு பேர் தான் எனக்குத் தெரிந்தவர்கள் என்று யூகிக்கிறேன். இப்பொழுது நீங்கள் ஜெபியுங்கள். நீங்கள் விசுவாசித்து, “கர்த்தராகிய இயேசுவே, அங்கே இருக்கும் அந்த மனிதர் ஒரு மனிதர் மாத்திரமே என்று நான் அறிவேன் (பாருங்கள்) ஆனால் நாங்கள் கடைசிக் காலத்தில் வாழ்ந்து வருகிறோம் என்று நான் நம்புகிறேன். நான் இங்கே வியாதியஸ்தனாக உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். நாங்கள் எங்கள்-ணர்வுகளால் பெலவீனத்தினிமித்தம் தொடக்கூடிய பிரதான ஆசாரியர் நீராயிருக்கிறீர் என்று வேதம் என்னிடம் கூறுகிறது” என்று கூறுங்கள். நீங்கள் அனைவரும் அதை ஒத்துக்கொள்கிறீர்களா? அது வேதமாயிருக்கிறது. நல்லது, அந்தப் பிரதான ஆசாரியர் இங்கு பூமியில் இருந்தபோது, ஒரு நாள் ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். “நான் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டால் நான் குணமாகிவிடுவேன்” என்றாள் அவள். எனவே அவரைத் தொட்டுவிட்டு போய் நீங்கள் செய்வதுபோல், உட்கார்ந்து கொண்டோ, 63நின்று கொண்டோ இருந்தாள். இயேசு திரும்பிப்பார்த்து, “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். பேதுரு, “எல்லாருமே உம்மைத் தொட்டனரே” என்று அவரைக் கடிந்து கொண்டான். ஆனால் அவர், “நான் பலவீனமடைந்ததை உணருகிறேன். என்னிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டுச் சென்றது” என்றார். அந்த ஸ்திரீயைக் காணும்வரை கூட்டத்தினரை சுற்றிலும் பார்த்து அவளுடைய உதிரப்போக்கைக் குறித்துக்கூறி அவளுடைய விசுவாசம் அவளை இரட்சித்தது என்று கூறினார். அது சரிதானே? இயேசு அவ்வாறு கூறினார் என்று எத்தனை பேர் அறிவீர்கள்? “ஆமென்” என்று சொல்லுங்கள். நல்லது, வேதம் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று கூறியிருக்கிறதென்று எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? ஆமென். மேலும் வேதம், இப்பொழுதே, இந்நேரமே அவர் மகத்துவமானவரின் வலது பாரிசத்தில் உட்கார்ந்து கொண்டு, உங்களுக்காகப் பரிந்துபேசிக் கொண்டிருக்கும் பிரதான ஆசாரியர் என்று கூறுகிறது. இப்பொழுதே உங்கள் பெலவீனத்தினிமித்தம் தொடக்கூடிய பிரதான ஆசாரியர். “ஆமென்” என்று கூறுங்கள். அது சரி. இப்பொழுது நீங்கள் அப்படியே..... நான் என்னை சமர்ப்பிக்கிறேன். அது ஒரு வரம். ஆம் ஐயா, உங்களாலன்றி செயல்படக் கூடாத ஒரு தேவவரமாக அது உள்ளது. நீங்கள்தான் அந்த விசுவாசத்தை உடையவர்களாயிருக்க வேண்டியவர்கள். பாருங்கள். அந்த ரோமப் போர்ச்சேவகன் அவருடைய முகத்தை ஒரு கந்தையினால் சுற்றி ஒரு கோலை எடுத்து அவருடைய தலையின் மேல் அந்தக் காலையில் அடித்து, “நீ ஒரு தீர்க்கதரிசியாயிருந்தால், உன்னை அடித்தது யார் என்று எங்களுக்குச் சொல்லு” என்றான். இயேசு தமது வாயைத் திறக்கவேயில்லை. அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டதாக அவர் உணரவில்லை; ரோம போர்ச்சேவகனும் அப்படி அறியவில்லை. 64இயேசு அவர் முகத்திலும் தாடியிலும் எங்கும் துப்பப்பட்டவராய் அவர் முகம் கந்தையால் இவ்விதம் சுற்றப்பட்டவராய் இரத்தம் சிந்தினவராய் அங்கே நின்றுகொண்டிருந்தார். ஒரு வேளை அரைகுறையாக மதுவை அருந்தினவனாய் ஒரு கோலுடன், “ஏய் அவர்கள் என்னிடம் உன்னைத் தீர்க்கதரிசி என்றும் உன்னால் இருதயத்தின் சிந்தனைகளை வகையறுத்துக் கூறமுடியும் என்றும் சொன்னார்கள். உன்னை அடித்தது யார் என்று எங்களுக்குச் சொல். அப்பொழுது நான் உன்னை விசுவாசிப்பேன்” என்றான். அவரோ அவ்வாறு ஒன்றும் செய்யவேயில்லை. சாத்தான், “நீர் தேவனுடைய குமாரனேயானால் இங்கேயே ஒரு அற்புதம் செய்யும், நீர் அதைச் செய்வதை நான் காணட்டும், ஒரு அற்புதத்தை நடப்பித்து நான் காணும் படி செய்யும். அப்பொழுது நான் உம்மை விசுவாசிப்பேன்” என்று கூறியபோழுது இயேசு, “அப்பாலே போ சாத்தானே” என்றார். இன்றும் கூட அவர்கள், “தெய்வீக சுகமளிப்பவர் இதைச் செய்வதை நான் பார்க்கட்டும்” என்று கூறுவதைக் கேட்டிருக்கிறீர்கள். நிச்சயமாக, உறுதியாக அப்பாலே போ சாத்தானே என்றே கூறவேண்டும். இயேசு இன்றும் மாறாதவராகவே இருக்கிறார். நாம் நமது கண்களை இயேசுவின் மேல் தான் வைக்கிறோம்; குறை கூறுபவர்கள் மேல் அல்ல, இயேசுவின் மேல். நீங்கள் உங்கள் கண்களைக் கிறிஸ்துவின் மேல் வைத்திருக்கிறீர்கள். நீங்கள் குறை கூறுபவர்களைக் காணமாட்டீர்கள். அவ்விதமே சென்று கொண்டிருங்கள். அவர் எனக்கு மாறாதவராக என் தேவனாக இருக்கிறார் என்று அறிந்திருக்கிறேன். அது சரியே, அவர் என் இரட்சகர். 65இப்பொழுது, நீங்கள் ஜெபியுங்கள், அங்கே வெளியே இருக்கும் நீங்கள்; மேலும் நாம் காண்போம். இன்றிரவு இங்கு புதியவர்களாக வருகை தந்திருக்கிற நீங்கள் அனைவரும், இந்தக்கூட்டங்களுக்கு இதுவரை வந்திராதவர்களாயிருக்கிற நீங்கள், இன்று அவர் அதே காரியங்களைச் செய்வாரானால் அது உங்களை விசுவாசிக்கச் செய்யுமா? உங்கள் கரங்களை உயர்த்தி, “நான் - நான் விசுவாசிப்பேன்” என்று கூறுங்கள். மூன்று கரங்கள் மட்டும். எனவே தான் அமெரிக்கா வீழ்ச்சியின் பாதையில் செல்கிறது. அங்கே கூட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு பேர் புதியவர்கள் என்று சற்றுமுன்பு கூறப்பட்டது. “கிறிஸ்து இங்கு தோன்றி தாம் பூமியிலிருந்த போது செய்த அதே காரியங்களைச் செய்வாரானால் எத்தனைபேர் விசுவாசிப்பீர்கள்?” என்று கேட்டேன். மூன்று கரங்கள் உயர்த்தப்பட்டது. இப்பொழுது ஒலிநாடாவில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களெல்லாம் என்னவென்றும், ஏன் கூறப்பட்டதென்றும் நீங்கள் காணமுடியும். பாருங்கள்? அது சரி. நீங்கள் உண்மையான விசுவாசிகளாயிருந்த போதிலும், விசுவாசிக்கவும், சிந்திக்கவும், ஜெபிக்கவும் தொடங்குங்கள். நான் கூறவேண்டாமென்று நினைக்கிறவைகளை அது கூறும்படி செய்கிறது. அது ஒருவாறு என்னை சங்கடத்துக்குள்ளாக்குகிறது.... 66பரலோகப் பிதாவே, நீர் இரக்கமுள்ளவராயிருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். தேவனே எனக்கு - எனக்குத் தெரியாது. அது ஒருவேளை உம்முடைய சித்தமாயிருக்குமானால், பிதாவே, அது இல்லாமல் போகலாம். ஆனால் கர்த்தாவே, இந்த ஜனங்கள் நீர் என் மூலம் பேசிய வார்த்தைகள் சத்தியமென்று அறியும்படி செய்யவேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். அது மீண்டும் வரும்படிச் செய்யும். நீர் இங்கிருக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன். ஏன் ஒரு சந்தேகத்தின் நிழலுக்கப்பால், கர்த்தாவே, நீர் இங்கே இருக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன். நீர் அதை அருளும்படி நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, ஜனங்கள் எவ்வளவுதான் சபைக்குப்போனாலும், எவ்வளவு தான் பாடினாலும், எவ்வளவுதான் நடனமாடினாலும் என்னதான் செய்தாலும் அவர்கள் விசுவாசிகளாயிராவிட்டால் அவர்கள் இழக்கப்பட்டவர்களே என்று ஜனங்களை அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து கடிந்துகொண்டு கடினமாய் பிரசங்கித்தேன். கர்த்தாவே, இன்றிரவு அது சத்தியமென்று நீர் விளங்கச் செய்ய வேண்டுமென்று ஜெபிக்கிறேன். பிதாவே, அவிசுவாசமே நாங்கள் கொண்டிருக்கும் பாவம் என்று நீர் விளங்கச் செய்ய வேண்டுமென்று ஜெபிக்கிறேன். 67அவர்கள் தங்கள் சுயநீதியில் நம்பிக்கை கொள்ளாதிருப்பார்களாக. அந்தப் பரிசேயர்களும் ஆசாரியர்களும் தங்களால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு நீதிமான்களாயிருந்தனர். எனவே... அவர்கள் எந்தத் தீங்கும் செய்யவில்லை. அவர்கள் எவரைக்குறித்தும் ஒரு தீங்கான வார்த்தை கூறவோ, திட்டவோ கூட இல்லை. ஆனாலும் அவர்கள் தங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள் என்று கூறினீர்; ஏனெனில் அவர்கள் உம்மை மேசியா என்று அறிந்தும் விசுவாசியாத காரணத்தினால். பிதாவே, அத்துடன் உம்முடைய அதே ஆவி இங்கு வந்து இன்றிரவு அதே காரியங்களை செய்வதைக்கண்டு நான் அதே காரியங்களைக் கூவி அழைத்துக் கொண்டிருக்கிறேன். கர்த்தாவே, உமது ஊழியக்காரனாகிய என் பட்சமாய் நிற்பீராக. கூட்டத்தினருடன் என்னையும் உம்மிடம் இயேசுவின் நாமத்தில் சமர்ப்பிக்கிறேன். கர்த்தாவே, ஜனங்களினூடாய் சென்று அங்கே அவர்களை இழுத்துக்கொள்ளும். தாங்கள் வியாதியுடனும் உபத்திரவங்களுடனும் வந்திருக்கிற அவர்கள் உம்மைத் தொடும்படியான விசுவாசத்தை அவர்களுக்களியும். நீர் தேவன் என்பதை நீர் நிரூபிப்பீராக. நாங்கள் உமக்காகச் சார்ந்திருக்கையில் நீர் பேச வேண்டுமாக இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். அவர் இங்கிருக்கிறார் என்று அறிவேன்... கர்த்தாவே உமக்கு நன்றி. ஐயா, என் வலது பக்கத்தில் இருக்கையின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு, ஜெபித்துக் கொண்டிருக்கும் கறுப்பு நிற சகோதரனே, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களா? அங்கே பின்பக்கமாக சரியாக இரண்டாவது நபராக உட்கார்ந்து என்னைப்பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்திரீயே, தேவன் உன்னை நீரிழிவு நோயினின்று நன்றாகக் குணமாக்குவார் என்று விசுவாசிக்கிறாயா? அது சரி. விசுவாசித்தால் அதைப்பெற்றுக் கொள்ளலாம். 68போதகரே, உம்மைக் குறித்தென்ன? அதைக்குறித்து நீர் என்ன நினைக்கிறீர்? தேவன் உங்கள் ஆவிக்குரிய பிரச்சினைகளை உங்களை விட்டு நீக்கி உங்களை விசுவாசிக்கச் செய்வார் என்று நினைக்கிறீர்களா? அது சரி. நீங்கள் கேட்கிறதைப் பெற்றுக்கொள்ள முடியும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவர் எதைத் தொட்டார்? அங்கே வரிசையில் கடைசியாக புற்றுநோயுடன் உட்கார்ந்திருக்கும் கறுப்புநிற சகோதரியே, தேவன் உன்னை சுகமாக்குவார் என்று நினைக்கிறாயா? நீ ஒரு ஜெய அட்டையை வைத்திருக்கிறாயா? ஜெப அட்டை உனக்குத் தேவையில்லை. நீ சுகமாக்கப்பட்டாய். ஸ்திரீயே, அங்கேயே உனக்குப் பதிலளிக்கப் பட்டிருக்க வேண்டும். நீ ஜெப அட்டையை வைத்திருக்கவில்லை. இங்கு ஒரு கனத்த உருவத்துடன் கண்ணாடி அணிந்து கொண்டு பெண்களுக்குள்ள பிரச்சினைகளுடன் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிற, உட்கார்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கிற ஸ்திரீயே, தேவன் உன்னை சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறாயா? அதை உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? நீ ஜெப அட்டை வைத்திருக்கிறாயா? நீ அதை உபயோகிக்க வேண்டிய அவசியமில்லை. உன் விசுவாசம் உன்னை குணமாக்கிவிட்டது. 69நான் பின்பக்கமாகத் திரும்புகிறேன். நான் உங்கள் முன்பக்கமிருந்து கூறினவைகளை கேட்டிருக்கிறீர்கள். அங்கே எனக்குப் பின்னாக இருதயக் கோளாறுடனும் மூட்டுவலி வாதத்துடனும் ஒரு ஸ்திரீ உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். இங்கேயே இருக்கிறாள். திருமதி. ப்ரேடி எழுந்து நில். எனக்கு அந்த ஸ்திரீயைத் தெரியாது. ஆனால் அவைகள் (வியாதிகள்) மறைந்து விட்டது. இங்கு அவிசுவாசத்துடன் உட்கார்ந்திருப்போரின் காரியம் என்ன? உங்களுக்கு அவமானம். இங்கே, இந்த ஸ்திரீயின் வரிசையில் அவளுக்கடுத்து ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு ஸ்திரீகளுக்கு அடுத்ததாய் அங்கே பெலவீனமான புலம்பலுடன் உட்கார்ந்துகொண்டிருக்கும் ஸ்திரீ... சகோதரி ரைஸ், அதைத் தவறவிடவேண்டாம். உங்கள் கரங்களை உயர்த்தி உங்கள் சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஆமென். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? 70இங்கே ஒரு ஸ்திரீ புற்றுநோயினால் மரிக்கும் நிலையில் உட்கார்ந்துகொண்டிருக்கிறாள்... திருமதி. ஷெல்டன். உன் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பாயா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உன் கரங்களை உயர்த்தி உன் சுகத்தைப் பெற்றுக்கொள். இப்பொழுது, நான் உன்னை அறியாதவனாயிருந்தால், ஸ்திரீயே, உன் கரங்களை இவ்விதம் அசைத்துக் காட்டு. நாம் ஒருவரையொருவர் அறியாத அன்னியர்களாக இருப்போமானால் உன் கரங்களை முன்னும் பின்னும் அசைத்துக்காட்டு. பாருங்கள். நீங்கள் விசுவாசிக்கவில்லையா? பெந்தெகோஸ்தே ஜனங்களே, உங்களைக் குறித்த காரியம் என்ன? கிறிஸ்துவென்றால் என்னவென்று நீங்கள் அறிந்திருக்கவில்லையா? நீங்கள் சுகமாக்கப்பட விரும்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் காலூன்றி நின்று அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அதை நீங்கள் விசவாசிக்கும்படி இயேசுவின் நாமத்தில் சவால் விடுகிறேன். எழுந்து நின்று ஒருவர் கரங்களை ஒருவர்மேல் போட்டு உங்கள் சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். அப்படிச்செய்ய வேண்டியவர்கள் நீங்கள்தான் என்று நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? 71இப்பொழுது உங்கள் கரங்களைக் கிறிஸ்துவுக்கு நேராக உயர்த்தி நாம் ஜெபிப்போம். நீங்களாகவே ஜெபித்துக் கொண்டிருங்கள். நான் உங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கும் வேளையில் நீங்கள் உங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருங்கள். பரலோகப் பிதாவே, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் இந்த ஜனங்களை உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். கர்த்தாவே, அவர்கள் ஒவ்வொருவரையும் சுகமாக்கும். உமது ஆவியும் வல்லமையும் அவர்கள் மீது வந்து அவர்களை சுகமாக்குவதாக. தேவனுடைய மகிமைக் கென்று இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். இங்கிருக்கும், இன்னும் தேவனை உங்கள் சொந்த இரட்சகராக அறிந்திராத பாவிகளாகிய ஒவ்வொருவரும் இப்பொழுது முன்பாக வந்து அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்வீர்களா? நீங்கள் முன்பாக வந்து கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொள்ளும்படி அழைப்பு கொடுக்கிறேன். நீங்கள் வருவீர்களா? சில காலம் முன்பு வரை அவிசுவாசியாயிருந்தவர்கள் இப்பொழுது ஏற்றுக்கொள்வீர்களா? ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. பின்பக்கமாக வாருங்கள். இந்த வாலிபன், அது தான், ஓ.... அது சரி. சில நிமிடங்களுக்கு முன்பு வரை அவரை விசுவாசியாதவர்கள், உங்கள் அவிசுவாசத்தினிமித்தம் தேவன் உங்களை மன்னிக்க வேண்டுமென்று விரும்புவோர், பீடத்தினருகில் வாருங்கள். இப்பொழுதே வாருங்கள். நம்பிடுவாய், நம்பிடுவாய், க (வந்து கொண்டிருக்கிற இந்த மனிதர்களை தேவன் ஆசீர்வதிப்பாராக) யாவும் கைகூடும், நம்பிடுவாய், நம்பிடுவாய், நம்பிடுவாய், யாவும் கைகூடும், நம்பிடுவாய். மெத்தோடிஸ்ட்டுகள், பாப்டிஸ்ட்டுகள், பிரஸ்பிடேரியன்கள், லூத்தரன்கள், கத்தோலிக்கர்கள் மற்றும் பெந்தெகொஸ்தேயினர் நம்பமுடியாத எண்ணிக்கையில் பீடத்தைச் சுற்றிலும் வந்துள்ளனர். அபிஷேகம் எங்களில் இருக்கும் சமயத்தில் எங்கள் கைகளை உங்கள் மீது வைக்கும்படியாக வாருங்கள்.... வேறு எது அதைச் செய்யமுடியும்? ஜெப வரிசையில் அழைக்கப்பட்ட நீங்கள் இங்கு எங்கிருந்தாலும் நீங்கள் எனக்கு அறிமுகமில்லாதவர்களாயிருந்தால் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். ஜெப வரிசையில் அழைக்கப்பட்டவர்கள் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அவர்கள் அதோ அங்கே இருக்கின்றனர். பாருங்கள். நான் அந்த ஜனங்களை அறிந்திருக்கவில்லை. 72பரிசுத்த ஆவியானவர் என்னிடம் என்ன கூறினார் என்று உங்களுக்கு தெரியுமா? “இப்பொழுதே ஒரு பீட அழைப்பைக் கொடு. இங்கு அனேக அவிசுவாசக் கிரியைகள் உண்டு...” அந்தக் கிரியைகள் இங்கிருந்து வெளியேறு மட்டும் நான் இந்தக் கூட்டத்தைத் தொடர்வது கூட என்னால் கூடாததாயிருக்கிறது. காரியம் என்ன? அவைகள் வெளியேறட்டும்... உங்களைச் சுற்றி அப்படிப்பட்ட ஒரு (அவிசுவாசத்தின் - மொழி பெயர்ப்பாளர்) ஆவி இருக்க வேண்டாம். இயேசு இன்றிரவு இங்கு பிரசன்னமாவாரானால் நீங்கள் அவ்விதமானவர்களாய் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்க முடியுமா? விசுவாசமில்லாதவர்களே, நீங்கள் முன்னே வாருங்கள். யாவும் கைகூடும், நம்பிடுவாய். நம்பிடுவாய், நம்பிடுவாய், யாவும் கைகூடும்.... வாருங்கள், உங்களில் ஒவ்வொருவரும் முன்பாக வாருங்கள். உங்களுக்கு மிக அருகாமையில் கிறிஸ்துவின் பிரசன்ன மிருக்கையில் நீங்கள் ஏன் பின்பக்கமாக இருந்து கொண்டிருக்க வேண்டும்? உங்களில் ஏதேனும் ஊறு விளைவிக்கும் உணர்வுகள் இருக்குமாயின் உங்களிலிருந்து அதை வெளியே அகற்றிவிடுங்கள். இப்பொழுது முன்னே வாருங்கள். ...விசுவாசிக்கிறவர்களுக்கு யாவும் கைகூடும், நம்பிடுவாய். நம்பிடுவாய்..... விசுவாசியுங்கள் என்பதே அவர் உங்களிடம் நீங்கள் செய்யவேண்டும் என்று கூறுவதாக இருக்கிறது. அது அவர் என்று அப்படியே விசுவாசியுங்கள். நீங்கள் விசுவாசிக்காதிருந்தால் அதைக் (அவிசுவாசத்தை - மொழி பெயர்ப்பாளர்) குறித்து மனந்திரும்பி என்ன சம்பவிக்கிறது என்று பாருங்கள். .... கைகூடும், நம்பிடுவாய். நம்பிடுவாய்.... 73சகோதரியே வாருங்கள். இது அதுதான். “கண்ணீ ரோடே விதைக்கிறவன் கெம்பீரத்தோடே அறுப்பான். தான் அறுத்த விலையேறப்பெற்ற அரிகளோடே திரும்பிவருவான்.” யாவும் கைகூடும், நம்பிடுவாய். போதகர்கள் வந்து தாங்கள் தவறாயிருக்கிறதை அறிக்கை யிட்டதைக் காண மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நம்பிடு.... சுத்தமான களங்கமற்ற அறிக்கையை தேவன் கனம் பண்ணுவார். அவர் நிச்சயம் அதைச் செய்வார். இன்றிரவு இங்கிருக்கும் இதே ஆவியின் பிரசன்னத்திற்கு முன்பாக நீங்கள் நியாயத்தீர்ப்பு நாளில் நிற்கும்போது என்ன செய்யப் போகிறீர்கள்? அது சரியாக ஏற்ற வேளையில் வரும் என்பதை நினைவில் வையுங்கள். அதைத்தான் அவர் கூறினார். அவர் அதைச் செய்வதாக இருந்தார். இதோ அது இங்கே இருக்கிறது. —நம்பிடுவாய்.... இன்னும் சிலர் இப்பொழுது வருவீர்களா? நம்பிடு.... 74நான் உங்களுக்கு சயாதீனம் அளிக்கிறேன். நீங்கள் நேர்மையுடன் மனந்திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் உங்கள் அவிசுவாசத்தினின்று விடுதலையை நான் கூறுகிறேன். நீங்கள் சபைக்குச் செல்பவராயிருந்தும் மூட நம்பிக்கையுடையவர்களாய் நீங்கள் சரியாயிருக்கிறோமா தவறாயிருக்கிறோமா என்று அறியாமலிருப்பீர்களானால் நீங்கள் முன்பாக வந்துவிடுவது நல்லது. நம்பிடுவாய். இப்பொழுது, பொறுப்பாளர்களே, நீங்கள் வாருங்கள். எல்லாப் பொறுப்பாளர்களும் வெளிப்புறமாக வாருங்கள். ஜனங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். பொறுப்பாளர்களே, நீங்கள் வெளிப்புறமாக வந்து ஜனங்களைச் சுற்றிலும் நில்லுங்கள். ஏனெனில் நாம் ஜெபத்தை ஏறெடுக்கப் போகிறோம். மேலும் அங்கே பின்பக்கமாயிருக்கும் அவிசுவாசிகள் முன்னே வர விரும்பினால் எப்படியாகிலும் நேராக முன்னே வாருங்கள். 75இன்றிரவு இப்படி முன்பாக வந்திருப்பதினால் ஜனங்களாகிய நீங்கள் உங்கள் எண்ணங்களில் தவறாயிருக்கிறீர்கள் என்றும் இப்போது வந்து ஜீவனுள்ள தேவனுடனான ஒரு அனுபவத்தைப் பெற்றுக்கொண்டோம் என்று நிச்சயத்தை உடையவர் களாயிருக்கிறீர்கள். இங்கே இந்தப் பீடத்துக்கருகிலும் வெளியே உள்ள ஜனங்களிடத்திலும் நீங்கள் காணும்படி கிரியை செய்து கொண்டிருக்கும் இதே தேவன் தான் உங்களுடைய தேவனாக இருக்கிறார். நீங்கள் மட்டும்... நீங்கள் ஒருவேளை... நீங்கள் அதை சற்று நிறுத்தி ஆலோசித்திருப்பீர்களானால்.... அவர் இங்கிருக்கிறார். உங்களை இங்கு வரும்படி அழைத்திருக்கும் ஒருவர் அவரே. பாருங்கள். என்னை சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி அபிஷேகித்த அதே ஆவியானவரே அங்கே இருக்கும் ஜனங்களின் மத்தியில் வந்து உங்களை அறிந்திருப்பவரும் அவரே. உங்கள் பெலவீனங்களினி மித்தம் நீங்கள் அவரைத் தொடமுடியும். ஜனங்களே சந்தேகத்தின் நிழலுக்கப்பால்... ஜனங்களே என் வாழ்வில் மேடையின் மேல் ஜனங்களுக்கு முன்நின்று இரவுக்குப்பின் இரவாக, ஒவ்வொரு நாளும், வாரத்தின் பின் வாரமாக, வருடங்களாக, எழுப்புதல் கூட்டங்களுக்குப் பின் எழுப்புதல் கூட்டங்களாக நான் கூறியவைகள் சம்பவிக்காமல் தவறினதை ஒரு தடவை கூட கண்டதேயில்லை. அது சரியென்றால் சபையே, “ஆமென்” என்று கூறு. அது தேவனோடு இருக்குமேயானால் பின்பு ஏன்?... 76இது, “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று நான் கூறட்டும். சிக்காகோ ஜனங்களே, நீங்கள் மனம்திரும்புவது நல்லது. உங்கள் வேளை மிக சமீபமாயிருக்கிறது. மனந்திரும்புங்கள். வந்து, விசுவாசியுங்கள். ஏனெனில் ஒரு வேளை வருகிறது. அப்பொழுது நீங்கள் இதற்காகப் புலம்பினாலும் அது (கிருபை - மொழிபெயர்ப்பாளர்) அங்கே இருக்கப் போவதில்லை. நீங்கள் அப்பொழுது, மெய்யான ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஆகவே உங்களுக்குப் பொய்யான ஒன்று தான் கிடைக்கும். இயேசு, “நான் என் பிதாவின் நாமத்தில் வந்தும் நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. வேறொருவன் (தன் சுய நாமத்தினால்) வருவான். அவனை ஏற்றுக்கொள்வீர்கள்” என்று கூறினார். நான் அவருடைய வார்த்தையையே குறிப்பிடுகிறேன். இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறது என்பதை நினைவில் வையுங்கள். 77உங்களால் கூடும்போது அவரை ஏற்றுக்கொள்வது நல்லது. ஏனெனில் உலகத்தில் அனேக காரியங்கள் சம்பவிக்க ஆயத்தமாயிருக்கிறது. இதுவரை பொறிக்கப்படாத (உண்டாயிராத) பூச்சியினம் உண்டாகும். உங்களை சரிப்படுத்திக் கொள்ள இதுவே சமயம். நீங்கள் சிக்கிக்கொள்வதற்கு முன்பு அதை (மனந்திரும்புதலை - மொழிபெயர்ப்பாளர்) செய்வது நல்லது. பின்பு இரக்கத்தின் சிங்காசனம் அகன்றுபோய்விடும். அதற்குப் பிறகு மீட்பு என்பதே இல்லாமல் போகும். எனவே உங்களால் கூடும்போதே வாருங்கள். தேவனின் ஒரு மிகச் சிறிய பாகம் உங்களை அழைத்தாலும் இங்கே வரத்துவங்குங்கள். எனவே நான் நிச்சயமுள்ளவனாயிருப்பேன்...நான் நிச்சயமுடையவனாயிருக்கட்டும். நாமெல்லாரும் சேர்ந்து ஒரு முறைகூட, “நம்பிடுவாய், நம்பிடுவாய், (யாரோவொருவர் அங்கு வெளியே இருக்கிறார் என்றும் யாரோவொருவர் எங்கோ வெளியே இருக்கிறார் என்றும் நான் உணருகிறேன்.) நம்பிடுவாய், யாவும் கைகூடும்.... 78ஏதோ ஒன்றைக்கூற நான் ஒரு மத வைராக்கியமுடையவன் அல்ல. நான் உண்மையாக என் இருதயத்தில் அவ்விதம் கருதவில்லை. நிச்சயமாக தேவன் செய்தவைகளைக் கண்டபின்பு நீங்களும் அவ்விதம் நினைக்க மாட்டீர்கள். ஒரு இளவயதுப் பெண்கள் கூட்டமே இங்கு வந்துள்ளது. இப்பொழுது, யாவும் கைகூடும், நம்பிடுவாய். இப்பொழுது, பொறுப்பாளர்களே, நீங்கள் ஜனங்கள் மீது உங்கள் கரங்களை வைக்கும்படி விரும்புகிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் கரங்களை வைத்து.... சகோதரன் ஓரல் ராபர்ட்ஸ் கூறுவது போல் அதை ஒரு இணைக்கும் காரியமாக நினைத்து சிலர் மீது உங்கள் கரங்களை வையுங்கள். (அவர்களை சேர்த்து வைக்க இங்கு ஒரு இடமில்லை) இப்படிப்பட்ட கூட்டங்களில் சிலவேளைகளில் அவர்களுக்காக ஜெபிக்கும்படியான வேளையைப் பெறும் பொழுது, நாம் ஐக்கியங்கொள்வதற்கான இடத்தை ஆயத்தப்படுத்த வேண்டும் என்று நீங்கள் அறிவீர்கள். 79கூட்டத்தில் எங்குமுள்ள அனைவரும் நீங்கள் விரும்பினால் உங்கள் தலைகளைத் தாழ்த்தும்படி வேண்டுகிறேன். அங்கே வெளிப்புறம் இருக்கும், பீடத்திற்கு வந்திருக்கும் ஆத்துமாக்கள் மேல் வாஞ்சையுள்ள நீங்கள் இன்றிரவு பயபக்தியுடனும், தங்கள் தவறான காரியங்களை அறிக்கை செய்யவும், மன்னிப்பைக் கோரவும் வந்துள்ளனர் என்றறிந்திருக்கும் நீங்கள் தேவன் அவர்களுக்கு இரக்கமுள்ளவராயிருக்க வேண்டும் என்று ஜெபியுங்கள். நிச்சயமாக, அவர் அவ்வாறே இருக்கிறார். நான் ஏன் என் கரங்களை இவர்கள் மீது வைக்கிறேன் என்று ஆச்சரியப்படுவீர்கள் என்று யூகிக்கிறேன். நான் ஒரு மூடநம்பிக்கையுள்ளவனல்ல. நான் ஒவ்வொரு சமயத்திலும் ஜனங்கள் விசுவாசித்து சுகம் பெறுவதாக தரிசனத்தில் கண்டு, அந்த நேரத்தில் தானே அதே விதமாக என் கரங்களை இவர்கள் மீது வைக்கிறேன். சகோதர, சகோதரிகளே பாருங்கள். யாராவது ஒரு சாதாரண மனிதனாக இருந்துகொண்டு இங்கு நின்று சில காரியங்களைச் செய்வதையும், ஜனங்களினூடே அங்கு சென்று அவர்கள் வியாதிகளால் அவதியுறுவதையும் அறிந்து கொள்ளுதலையும் காணும்போது அவைகளை விசவாசிக்குமளவுக்கு நீங்கள் மனப்பாரம் உடையவர்களாயிருக்க முடிகிறதா? உங்களால் முடிகிறதா? அது - அது கூடாதது. (தேவன் ஒரு மனித சரீரத்தில் இருப்பதே - மொழிபெயர்ப்பாளர்) கடந்த இரண்டாயிரம் வருடங்களில் ஒரு போதும் நடந்திராத மிகப்பெரிய அற்புதமாக இருக்கிறது. நிச்சயமாக. 80நல்லது மனநோயில் உள்ளவர்களின் நிலைமையை நீங்கள் நினைத்துப் பார்க்க முடியும். ஒரு மனிதன் ஒரு சக்கர நாற்காலியிலிருந்து எழுந்து நடப்பதைக் காணும்போது... அது அவ்வாறே செய்யப்பட்டு வருகிறது. நிச்சயமாக. ஆனால் பரிசுத்த ஆவியானவர் இன்றிரவு செய்தது போன்றும், இயேசுகிறிஸ்து பூமியிலிருந்த போது செய்தது போன்றும் யாராவது ஒரு Ph.D. பெற்றவர் இங்கு மேடையின் மேல் வந்து நின்று அந்த ஜனங்களிடம் அந்த காரியங்களைக் கூறமுடியுமா என்று எனக்குக் காட்டுங்கள். அப்படிப்பட்ட வல்லமையையுடைய ஒரு மனிதன் எங்கே இருக்கிறார் என்று கூறுங்கள். நாளை இரவு (அப்படிப்பட்ட) அவரை இங்கு மேடையின் மேல் கொண்டுவாருங்கள். (அப்படிப்பட்ட) ஒருவருக்காக நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு மனிதன்? அது இங்கே இல்லை. 81அப்படிப்பட்டதைச் செய்கிற ஒருவர் பரிசுத்த ஆவியானவரே. அங்கே கிறிஸ்தவர்களாயிருந்து வியாதியாயிருப்பவர்கள் ஜெபித்துக் கொண்டிருந்து இயேசுகிறிஸ்துவை தொட்டுக்கொண்டிருக்கின்றனர். தெய்வீக வரத்தினால் அவர் இங்கிருக்கிறார் என்று அறிந்திருக்கிறேன். நான் அப்படியே நோக்கி அவர்களைக் காண்கிறேன். அங்கே அவர்கள் மேல் ஒரு ஒளி இருக்கிறது. அந்த ஒளி பரவுகையில் இங்குள்ள உங்களை நான் காண்பது போலவே (தரிசனத்தில் - மொழிபெயர்ப்பாளர்) அவர்கள் என்னவாயிருக் கிறார்கள் என்றும், அவர்கள் யார் என்றும் காண்கிறேன். அவர்கள் வேறு எங்கோ ஏதோ காரியங்களைச் செய்வதை நான் (தரிசனத்தில்) கண்டு பிறகு அப்படியே பேசுகிறேன். அப்பொழுது நான் பேசும்பொழுது நான் என்ன கூறுகிறேன் என்று எனக்குத் தெரியாது. பாருங்கள். அது என்னிலிருந்து கடந்துபோகும் ஒரு சொப்பனம் போன்றிருக்கிறது. ஆனால் அது (நான் கூறுவது - மொழிபெயர்ப்பாளர்) அங்கே இருக்கிறது. அது சரியாக தேவன் என்ன செய்யப் போவதாகக் கூறியிருக்கிறாரோ அதுவாகவே இருக்கிறது. அதை மறுக்க முடியுமா என்று எந்த வேதபண்டிதனையும் கேட்கிறேன். நீங்கள் அவ்விதம் செய்ய முடியாது. ஏனெனில் அது இங்கே சரியாக வேதத்தில் இருக்கிறது. இது “கர்த்தர் உரைக்கிறதாவது.” மேலும் இங்கு அது அதன் வேளையில் இருக்கிறது. 82இப்பொழுது, நீங்கள் இங்கு பாவ அறிக்கை செய்கிறவர்களாக நின்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தேவனுடன் சரியாக இருக்க விரும்புகிறீர்கள். நான் உங்களை என்றாவது ஒரு நாள் இப்போதுள்ளதைக் காட்டிலும் ஒரு மேலான தேசத்தில் சந்திக்க விரும்புகிறேன். என் சகோதரனே, சகோதரியே நான் உனக்குக் கூறுகிறேன். கிறிஸ்து இன்றும் ஜீவிக்கிறார். கிறிஸ்து இங்கே இருக்கிறார். இது காலத்தின் முடிவுக்கு சமீபமாயிருக்கிறது. என்னைப் பொறுத்த வரை அவர் இந்த சந்ததியில் வருகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். இயேசு வருவதை இந்தச் சந்ததி காணும் என்று நான் விசுவாசிக்கிறேன். என் முழு இருதயத்தோடும் அதை விசுவாசிக்கிறேன். எப்படியோ வயதானவனாகிய நானும் கூட அவர் வருவதைக் காண்பேன் என்று உணர்கிறேன். அவர் வருவதை நான் காண்பேன் என்றே விசுவாசிக்கிறேன். 83இப்பொழுது இங்குள்ள நீங்கள் அனைவரும் உங்கள் சொந்த விருப்பப்படி ஜெபிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். உங்கள் தவறுகளை அறிக்கையிடுங்கள். “தேவனே நான் வருந்துகிறேன்” என்று கூறுங்கள். இந்தக் கட்டிடத்திலுள்ள நீங்கள் ஒவ்வொருவரும் பாவங்களுடன் நின்று கொண்டிருக்கும் நீங்கள் அனைவரும், “தேவனே என்னை மன்னியும். இன்றிரவு முதற்கொண்டு நான் ஒரு கிறிஸ்தவனாயிருக்க விரும்புகிறேன்” என்று கூறுங்கள். இங்கே தயக்கத்துடன், அறிக்கையிட முடியாதவர்களாய் இருக்கும் நீங்கள், “இப்பொழுது கர்த்தாவே, இதோ நான் இங்கிருக்கிறேன். நான் என் இருதயத்தைத் திறந்து என் கரங்களை உமக்கு நேராக உயர்த்தியுள்ளேன். என் விசுவாசம் உம்மை நோக்கியுள்ளது” என்று கூறுங்கள். அதை நீங்கள் செய்யும்பொழுது தேவன் உங்களைப் பரிசுத்த ஆவியினால் நிறைத்து உங்களுக்கு மெய்யான காரியத்தை அருளுவார் என்று நான் விசுவாசிக்கிறேன். மெய்யாகவே பரிசுத்த ஆவியானவர் இங்கிருப்பாரானால், நீங்கள் பரிசுத்த ஆவியின் ஞானாஸ்நானத்தைப் பெற்றிருப்பீர்களானால், சகோதரரே அது இதைக் குறித்து சாட்சி கொடுக்க வேண்டும். ஏனெனில் அது பரிசுத்த ஆவி. இப்பொழுது இவைகளை எடுத்து?... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்) 84அது சரி. நாம் யாவரும் பயபக்தியுடன் நம் தலைகளை வணங்கி.... மேலும் ஒரு கணம் நீங்களாகவே மௌனமாக ஜெபியுங்கள். என் விசுவாசம் உம்மையே நோக்குகிறது கல்வாரியின் ஆட்டுக்குட்டியே ஓ, தெய்வீக இரட்சகரே! நான் ஜெபிக்கும்போது எனக்குச் செவிகொடும் என் பாவங்கள் அனைத்தும் நீக்கியருளும் உம்மை நான் ஒரு போதும் விட்டு விலக விடாதேயும். இருள் சூழ்ந்த வாழ்க்கையில் நான் நடந்து சென்று என்னைச் சுற்றிலும் துயரம் பரவியிருக்கையில் என் வழிகாட்டியாயிரும். இருள் வெளிச்சமாக கட்டளையிடும் துயரின் பயங்களை போக்கியருளும் ஓ, இன்று முதல் நான் முழுவதும் உம்முடையவனாயிருப்பேனாக! 85ஓ, பிதாவாகிய தேவனே, இந்த புதன் இரவு ஆராதனை முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. அங்கே பீடத்தைச் சுற்றிலும் இருநூறு அல்லது அதற்கும் அதிகமான ஜனங்கள் நின்று கொண்டிருக்கின்றனர் என்று நான் யூகிக்கிறேன். அவர்கள் மனந்திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு கிருபை தேவையாக உள்ளது. “என் விசுவாசம் உம்மை நோக்கியுள்ளது” என்னும் அருமையான நல்ல பழமையான பாடல் இசைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கர்த்தாவே, மனிதன் இவைகளைச் செய்ய முடியாதென்றும், அது நீர் தான் என்றும் அவர்கள் உணர்ந்து கொண்டிருக்கின்றனர். இன்றிரவு வேதபாடத்தின் மூலம் மிகாயா தனக்களிக்கப்பட்ட தரிசனம் தேவனால் உண்டானது என்றும் அது தேவனுடைய வார்த்தையின்படி இருந்தது என்றும் அறிந்திருந்தான் என்றும் பார்த்தோம். ஆகவே இன்றிரவு கர்த்தாவே, அவ்விதமாகவே நானும், நாங்களும் இந்த தரிசனம் தேவனால் உண்டானது என்று அறிகிறோம். ஏனெனில் அது அவருடைய வார்த்தையின்படி இருக்கிறது. 86மறுரூபமாக்கப்பட்ட சரீரத்துடன் குமாரன் வரும்போது அவரை எதிர் கொண்டு செல்ல எல்ஷதாயிடம் வந்து தேவபெலனைப்பெற்று ஆபிரகாமின் வித்தாகிய தெரிந்துகொள்ளப்பட்ட சபை ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. அதை அவர்கள் ஒவ்வொரு வருக்கும் அருளும் கர்த்தாவே என்று நான் வேண்டிக் கொள்ளுகிறேன். அவர்கள் உள்ளத்தின் வாஞ்சையை அவர்களுக்கு அருளும். கர்த்தாவே, பாவங்களை மன்னித்து, பின்மாற்றக் காரர்களைத் திருப்பிக்கொண்டு வந்து, விசுவாசிகளின் இருதயங்களிலிருந்து எல்லா சந்தேகங்களையும் எடுத்துப்போடும். கர்த்தாவே, இதை ஒரு மகத்தான வேளையாக்குவீராக. நீர் இங்கிருக்கிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன். நீர் இங்கிருக்கிறீரென்றும் உம்முடைய ஆவி கிரியை செய்து கொண்டிருக்கிறதென்றும் நான் அறிந்திருக்கிறேன். உமது பிரசன்னத்தின் இனிமையை நாங்கள் உணருகிறோம். நீர் ஜனங்களினூடாக வந்து நீர் என்ன செய்வதாக வாக்களித்தீரோ அதையே செய்து கொண்டிருக்கிறீர். இப்பொழுதும் பிதாவே, இவைகளைச் செய்து கொண்டிருப்பதினால் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் விசுவாசிக்கிறோம். 87இந்தப் பீடத்திலிருக்கும் இந்த ஒவ்வொரு ஆத்துமாவையும் நான் சொந்தமாக்கிக் கொள்ளுகிறேன். உமது ஊழியக்காரனாக நான் அவர்களுக்கும் மரணத்துக்கும் இடையில் நிற்கிறேன். நான் அவர்களுக்கும் அவிசுவாசத்திற்கும் இடையில் நிற்கிறேன். அந்தப் பாதையில் என்னை நிறுத்தி அவர்களைக் கட்டிவைத்திருக்கிற சாத்தானை நோக்கி, “நீ அவர்களை இனி.—ம் பிடித்து வைத்திருக்கமுடியாது” என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கூறுகிறேன். இங்கிருக்கும் எல்லாப் பிசாசுகளுக்கும் நான் சவால் விடுகிறேன். இவர்களை விட்டுப் போ. அவர்களை விட்டு வெளியே வா. இனிமேலும் நீ அவர்களைப் பிடித்து வைத்திருக்க முடியாது. அவர்களுடைய அவிசுவாசம் மறைந்துவிட்டது. இந்த வேளை யிலிருந்து அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கின்றனர். அவர்கள் வாழ்க்கையில் அவர்கள் ஊழியம் மகத்தானதாயிருக்கப் போகிறது. அவர்கள் செல்லுமிடமெல்லாம் தேவனின் வல்லமை அவர்களோடு இருக்கும். அவர்கள் இந்நேர முதற்கொண்டு தேவனின் பிள்ளைகளாயிருப்பார்கள். சாத்தானே, நான் உனக்குச் சொல்லுகிறேன். இயேசுவின் நாமத்தில் அவர்களை விட்டுப் போ. அவர்களை விட்டு வெளியே வா. இப்பொழுது, நீங்கள் ஒவ்வொருவரும் விசுவாசிப்பீர்களானால், கரங்களை உயர்த்தி அவருக்குத் துதி செலுத்துங்கள். இன்றிரவு, இங்கிருந்து கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் நீங்கள் விடுதலையுடன் செல்லுங்கள்.